அரசியல் செய்வதாகக் கூறுவோரின் அரசியல் பேதமையின் விளைவே அவலமான அடையாள அரசியல்- இது தமிழ்த்தேசியத்தை வலுக்குன்றச் செய்யும் புதிய ஏற்பாடு – அருள்வேந்தன்–

November 29, 2017 Admins 0

மக்கள் சார்ந்த சமூகச்சிக்கல்கள் முதன்மைச் சிக்கல் மற்றும் அடிப்படைச் சிக்கல் என்பனவாகும். சிங்கள பேரினவாதத்தாலும் இந்திய மேற்குலக கூட்டுச் சூழ்ச்சியினாலும் ஒடுக்குமுறைக்குள்ளாகி இன்று இறைமையை இழந்து கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பிற்கு உள்ளாகி, சொந்த மண்ணிலேயே ஏதிலிகளாக்கப்பட்டு நிற்கும் நிலையே தமிழ்த்தேசிய இனத்தின் முதன்மைச் … மேலும்

“ஈழம் விற்பனைக்கல்ல : மக்களே… படைப்புகள் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்!!!” -காக்கை-

November 6, 2017 Admins 0

படைப்புவெளியின் மீதான மக்களின் நம்பிக்கை என்ற தளத்தைப் பற்றிப்பிடித்துக்கொண்டு படைப்புகள் முகிழ்ந்துகொண்டிருக்கின்றன. படைப்புகளுக்கான இலக்கணங்கள் ஒவ்வொரு படைப்பும் உருவாக்கப்படும்போதே அதற்கான இலக்கணத்தையும் மொழியையும் அழகியலையும் அதன் வடிவத்தையும் உருவாக்கும் என்பது கலையியலாளர்களது கருத்தாகும். படைப்பு மக்களிடம் சேரும்போது அவை இலகுவில் மக்களால் … மேலும்

தமிழ்த் தேசியம் என்பது யாதெனில்……. -தம்பியன் தமிழீழம்-

October 28, 2017 Admins 0

புரட்சிகரக் கருத்தியல்களையும் பொருட் செறிவுள்ள சொற்களையும் பொருளறியாமலும் அதன் உட்கிடக்கை புரியாமலும் வாய்க்கு வாய்க்குமிடமெல்லாம் ஒலித்து வருவது பலருக்கு வழக்கமாகிவிட்டது. அந்த வகையில் இன்று பொருளறியாமலும் அதன் அடியாழம் புரியாமலும் அதனை உள்ளூர உணராமலும்தமிழ்த் தேசியம்மேலும்

தமிழினத்திற்கான அடிப்படைப் பொருண்மியக் கட்டமைப்பை உருவாக்குவோம் வாரீர்

August 28, 2017 Admins 0

பொருண்மிய வளர்ச்சி பற்றிய அறிவு தமிழர்களிடத்தில் மழுங்கிக் கொண்டே செல்கிறதா?

தேசக் கட்டுமானத்தில் பொருண்மியம் இன்றியமையாத ஒன்று. மிகக் கடுமையான நெருக்கடியான சூழ்நிலைகளிலும் விடுதலைப்புலிகள் பலதரப்பட்ட உற்பத்திச்சாலைகள், பண்ணைகள், களஞ்சியங்கள் என உருவாக்கி வேலை வாய்ப்புகளை மாத்திரமல்லாமல் தமிழர்களுக்கான பொருண்மியக் கட்டுமானத்தையும் … மேலும்

வார்த்தையாலங்களால் விளையாடும் அரசியல் குள்ளநரிகள்

August 20, 2017 Admins 0

தமிழ்த் தேசிய கூட்டமைப்பால் அடைய முடியாத அரசியல் இலக்கை தன்னை பாராளுமன்றம் அனுப்பினால் அடைந்து காட்டுவேன் என்பது மிக மோசமான பொய்த் தனமான அரசியல். தமிழருக்கான அரசியல் தீர்விற்கு சமஷ்டி பற்றிப் பேசி சிங்களத்திடம் அவமானப்பட்ட பின்னர், சமஷ்டியை சிங்களம் தராது … மேலும்

குண்டுச்சட்டிக்குள் குதிரையோடும் மண்குதிரைக் காவலர்கள் தமிழ்த்தேசியத்திற்கு சாபக்கேடு  -மறவன் –

August 6, 2017 Admins 0

 “பொருண்மியம் அரசியலைத் தீர்மானிக்கும். அரசியல் ஏனையவற்றையெல்லாம் தீர்மானிக்கும்” என்ற அரசியல் விஞ்ஞானத்தின் அரிவரியை உள்வாங்கியவர்களாக “இதில் அரசியல் இல்லை” என்பது எல்லாவற்றிலும் பார்க்க நுண்ணரசியல்  என்பதனையும், “இவர் அரசியலுக்கு அப்பாற்பட்டவர்” என்று சொல்வது அவருடைய அரசியல் பின்னணியை மறைப்பதற்கான அரசியல் என்பதனையும், … மேலும்

வினோதவுடைப்போட்டி சேகுவாரோக்களும் அவர்களது கனரக ஆயுதங்களான சமூக வலைத்தளங்களும் தமிழ்த்தேசியத்தின் சாபக்கேடுகள். – அருள்வேந்தன்

July 26, 2017 Admins 0

கடந்த காலங்களில் தமிழ்த் தேசியப் பரப்பில் சம்பவங்களின் பதிவுகள் ஊடகங்களாலும் ஊடகர்களாலும் சமூக பிரக்ஞையுடன் முழுமையான சம்பவங்களாகப் பதிவுசெய்யப்பட்டிருக்கும். ஆனால் தற்போதைய ஊடகங்களில் குறிப்பிட்ட சம்பவங்கள் தொடர்பான அனுமானங்களும் நயவஞ்சகக் கருத்தூட்டல்களும் சமூக வலைத்தளங்களில், குறிப்பாக அரசியல் பதிவுகளை அரசியல் தெளிவில்லாத, … மேலும்

லண்டனில் இடம்பெற்ற “காக்கை” இதழ் அறிமுக நிகழ்வில் ஊடகவியலாளர் இரவி அருணாசலம் ஆற்றிய உரை

July 16, 2017 Admins 0

நிகழ்கால அரசியலும் ஊடகங்களின் செல்நெறியும்

இரவி அருணாசலம்.

வணக்கம் நண்பர்களே,

‘நிகழ்கால அரசியலும் ஊடகங்களின் செல்நெறியும்’ என்பது தலைப்பு. நிகழ்காலம் என்றால் அதன் ஆண்டுக்கணக்கை வரையறை செய்யவேண்டும். நிகழ்காலம் என்பது ஈழத்தில் ஆயுதப்போர் நிகழ்ந்த முப்பது வருடங்களையும் உள்ளடக்குமா அல்லது அதன்

மேலும்

பண்பாட்டு மீட்சியே புரட்சிகர சக்திகளாக தமிழ் மக்கள் அணியமாதலை உறுதிப்படுத்தும்- செல்வி

July 2, 2017 Admins 1

பண்பாட்டு அரசியல், அடையாள அரசியல் போன்ற சொல்லாடல்களும் அவை தொடர்பான உரையாடல்களும் பின் நவீனத்துவச் சிந்தனையாளர்களின் வழி வந்து சேர்ந்திருப்பினும் மூன்றாம் உலக நாடுகளிலும் தொன்மை மரபுவழித் தேசிய இனங்களின் இருப்பிலும் அவற்றின் இருப்பின் அடையாள அரசியலிலும் பண்பாட்டு அரசியல் என்பது … மேலும்

போட்டுள்ள நாய் வேடம் எலும்பு பொறுக்குவதற்கு மட்டுமல்ல குரைப்பதற்கும் தான் என்பதை மறவாதீர்கள்! – கொற்றவை

February 25, 2017 Admins 0

 “பிந்தி அளிக்கப்படும் நீதியானது மறுக்கப்படும் நீதிக்கொப்பானது”

   போர் நிறைவடைந்துவிட்டது. பாலாறும் தேனாறும் ஓடப்போவதாகவும் தங்கக்கிண்ணத்தைத் தாங்கி வந்து அள்ளி அள்ளிப் பருகக் கொடுக்கப் போவதாகவும் கூறி, தமிழ் மக்களைப் பிரிதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறிக்கொண்டிருந்த தரப்பினர்களும் இணைந்து நல்லாட்சித் தேரினை இழுக்க வடக்கயிற்றின் முன்னால் … மேலும்