சிறப்பு நேர்காணல் – மனம் திறக்கிறார் மாவை! – கேள்வி 8

கேள்வி 1: 

75 அகவையிலுள்ள நீங்கள் தமிழர் அரசியலில் முதுபெரும் அரசியல்வாதியாகஇருக்கிறீர்கள்உங்களுடைய அரசியல் பயணம் உங்களுடைய மாணவப்பருவத்திலேயே தந்தை செல்வாவுடன் ஆரம்பித்திருக்கிறது. 1961 இல் நிகழ்ந்தசத்தியாக்கிரகப் போராட்டத்தில் உங்களைப் போல அன்றைய இளைஞர்கள்எப்படியான பங்கு வகித்திருந்தார்கள்யார் யாருக்கெல்லாம் அந்தப்போராட்டம்அரசியலின் தொடக்கப்புள்ளியாக அமைந்தது அவர்களில் எவர் எவர் எல்லாம்பின்னர் புரட்சிகர மறவழிப்போராட்டத்திற்கு வந்தார்கள்அறவழிப்போராட்டகாலத்தில் உங்களின் நம்பிக்கையை வென்ற தலைவர்கள் யாராக இருந்தார்கள்பின்னர் அவர்கள் மீதான உங்கள் கருத்துவேற்றுமைகள் எவ்வாறு இருந்தது என்பதைமீள நினைவூட்டி இன்றைய இளைய சமுதாயத்திற்கு எமது அரசியல் வரலாறுபுரிந்துகொள்ளத்தக்க விதத்தில் பதில் கூறுங்களேன் ஐயா.

பதில்: மாவை அய்யா

கேள்வி 2: 

நீங்கள் அரசியல் கைதியாக 7 ஆண்டுகளாக சிங்கள கொடுஞ்சிறையில் அடைக்கப்பட்டிருந்தீர்கள். அக்காலத்தில் உங்களுடன் சிறையில் இருந்தவர்கள் யார்? அக்காலத்தில் உங்கள் மனநிலை எவ்வாறு இருந்தது? தமிழ் அரசியல் கைதியாக நீண்டகாலம் சிறையில் இருந்தவராக, இன்று சிறைப்பட்டிருக்கும் விடுதலைக்காகப் போராடிய இளைஞர்களின் நிலை குறித்து எப்படிப் பார்க்கிறீர்கள்?? சிறைப்பட்ட வலி தெரிந்த நீங்கள், அவர்கள் விடுதலை குறித்து வாக்குச் சேகரிக்கும் பாராளுமன்ற அரசியல்வாதியாக இல்லாமல் அந்நாள் தமிழ் அரசியல் கைதியாக பதிலளியுங்கள்.

பதில்: மாவை அய்யா

கேள்வி 3:

சாதிய, பிரதேச சிக்கல்களை கூர்மைப்படுத்துவதன் மூலம் அடிப்படை முரண்பாடுகளைக் கூர்மையாக்கி முதன்மை முரண்பாடான தேசிய இனச் சிக்கல் நோக்கிய வேலைத் திட்டங்களின் வலுவைக் குறைக்க சிலர் இப்போது முனைப்பாக வேலை செய்வதாகத் தெரிகிறது. தமிழ்த் தேசிய இன விடுதலைப் போராட்ட ஆரம்ப நாட்களில் சாதிய ஒடுக்குமுறையைக் களையதீண்டாமை எதிர்ப்பு மாநாடுபோன்ற வேலைத் திட்டங்களில் தமிழரசுக் கட்சி ஈடுபட்டது. அதிலும் நிறையப் போதாமைகளும் முழு ஈடுபாடின்மையும் இருந்ததாகவும், யாழ்ப்பாணத்தில் இதற்கு எதிர்ப்பு இருந்ததால்திருகோணமலையிலிருந்தே இந்த வேலைத் திட்டம் தொடங்கியதாகவும் சொல்வதுண்டு. அதில் நீங்கள் வீடு வீடாகச் சென்று கழிப்பறைகளைத் தூய்மை செய்து கொடுத்து சாதிய ஒடுக்கல் சிந்தனைகளைத் தகர்க்க வேலை செய்ததாகக் கேள்விப்பட்டோம். மற்றும் நீங்கள் மலையகப் பகுதிகளுக்குச் சென்று எமது மக்களிடத்தில் வேலை செய்ததாகவும் கேள்விப்பட்டிருக்கிறோம். அது குறித்து உங்கள் நினைவுகளை மீட்க முடியுமா? சாதியம் மறுபடியும் தலைவிரித்தாட அதைக் கூர்மைப்படுத்தி எம்மைச் சிதைக்க வேலைகள் நடக்கும் இக்காலத்தில் உங்களைப் போன்றவர்கள் கூட பாராமுகமாக எந்த செயற்றிட்டமும் இல்லாமல் இருப்பதை எப்படிப் புரிந்துகொள்ளலாம்?

பதில்: மாவை அய்யா

கேள்வி 4:

தனித்தமிழீழம் கோரிய வட்டுக்கோட்டைத் தீர்மானத்தைத் தொடர்ந்து, அதற்கு மக்கள் ஆதரவு கோரி 1977 பொதுத்தேர்தலில் தமிழர்களின் ஒருமித்த ஆதரவினால் பெருவெற்றியீட்டி பாராளுமன்றம் சென்ற தமிழர் விடுதலைக் கூட்டணி, பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் பதவியேற்று, மாவட்ட அதிகார அவை என்ற அளவிற்கு கீழிறங்கிப் போனதை எப்படிப் பார்க்கின்றீர்கள்? 6 ஆம் திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வர, இனிமேல் பாராளுமன்ற அரசியல் வழியில் எதுவும் செய்ய முடியாது என்பதற்காக நாட்டை விட்டு இந்தியா சென்றீர்களா? ஆம் எனின் அந்தச் சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் போது என்ன மனத்துணிவில் இங்கு வந்து பாராளுமன்ற அரசியலில் இறங்கினீர்கள்?

பதில்: மாவை அய்யா

கேள்வி 5:

அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் நிலை 1977 பொதுத்தேர்தலில் எவ்வாறு இருந்தது?

பதில்: மாவை அய்யா

கேள்வி 6:

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கம் என்பது பாராளுமன்ற அரசியலையும் வினைத்திறனுடன் பயன்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் நிகழ்ந்தது. அதன் உருவாக்கத்தின் போது எழுந்த முரண்பாடுகள், அதன் உருவாக்கத்திற்கு முன்னின்று உழைத்தவர்கள், முரண்பாடுகள் களையப்பட்ட விதம், விடுதலைப்புலிகளுடனான உறவு என்பன பற்றிக் கூறுங்கள். தமிழீழ நிழல் அரசை நீங்கள் பார்த்த விதம் பற்றி கூற முடியுமா? கூட்டமைப்பு சின்ன உருவாக்கத்தில் வீடு, சூரியன் பேசப்பட்டது போல சைக்கிளும் பேசப்பட்டதாமே. அந்த முரண்பாடுகள் களையப்பட்ட விதம் பற்றி தெளிவுபடுத்துங்கள்.

பதில்: மாவை அய்யா

கேள்வி 7:

விடுதலைப்போராட்டத்தில் சுடுகலன்கள் பேசாநிலைக்கு வந்த காலத்தில் இறுதிநேர வெள்ளைக்கொடி விவகாரம், மூன்றாம் தரப்பு மேற்பார்வையில் சரணடைவு, போர் நிறுத்தம் போன்ற பேச்சுகளில் நீங்கள் என்ன பங்கு ஆற்றியிருக்கிறீர்கள்? அது தொடர்பில் அகில இலங்கை தமிழ் காங்கிரசின் பொதுச்செயலாளர் கஜேந்திரகுமார் உங்கள் மீதும்; குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார். அது குறித்து இதயத் தூய்மையுடன் பதிலளிப்பீர்களா?

பதில்: மாவை அய்யா


கேள்வி 8:

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பாக இருந்த பழம்பெரும் அரசியல் கட்சியான தமிழ் காங்கிரஸ் அதிலிருந்து வெளியேறியமை, அதை; தொடர்நது கூட்டமைப்பை ஒரு கட்சியாகப் பதிவு செய்யுமாறு சுரேஸ் பிரேமச்சந்திரன் பாரிய அழுத்தங்களை கூட்டமைப்பு தலைமைகளுக்கு கொடுத்தமை, தமிழரசுக்கட்சி தமிழ் தேசியக் கூட்டமைப்பில் எதேச்சதிகாரத்துடன் செயற்படுகின்றது என்பது குறித்து தொடர்சியாகக் கூறப்படுவன பற்றி தெளிவுபடுத்துங்கள்.

பதில்:

இப்பொழுது அந்தக் கேள்விகள் அதிகமாக இடம்பெறுவதில்லை. விடுதலைப் புலிகள் காலத்திலே தமிழரசுக் கட்சிச் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்று எல்லோரும் முடிவெடுத்துத் தேர்தலிலே வெற்றியீட்டி வந்திருக்கிறோம். அப்பொழுதெல்லாம் கூட்டமைப்பைப் பதிவு செய்ய வேண்டும் என்ற கருத்து இருந்ததில்லை. பதியக் கூடாது என்று நாம் சொல்ல வரவில்லை. ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையெழுத்திடு அதன் படி செயற்படுவோம் என்று நாம் இறுதியாக ஒரு தீர்மானம் எடுத்தோம். மாகாண சபையில் அல்லது இன்னொரு இடத்தில் பதவி வகிப்பவர்கள் பாரளுமன்றத் தேர்தலில் வேட்பாளார்களாக நியமிக்கப்படாமல் இருப்பது நல்லது என்று கூறி கடைசியாக நாம் ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கையைத் தயாரித்தோம். சிலர் ஒத்துக்கொள்ளவில்லை. ஆனால் நாங்கள் தான் அதனைப் பிரேரித்திருந்தோம். அப்பொழுது அந்த உடன்படிக்கை கையெழுத்திடப்படாமல் இருந்தது. ஆனால் அதன் படி நாங்கள் நடந்து கொண்டிருக்கிறோம். தமிழரசுக் கட்சிச் சின்னம் என்பதற்காக மட்டுமல்ல தமிழரசுக் கட்சியைச் சார்ந்தவர்கள் பெரும்பான்மையாக இருப்பதாலும் மக்கள் வாக்களித்து வருகிறார்கள். அதிலும் வெளிநாடுகளில் இருக்கும் எம்மவர்கள் தமிழரசுக் கட்சிக்கு ஆதரவாக இருக்கிறார்கள். நாங்கள் அங்கே செல்லும் போது அவர்களது ஆதரவுகளை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

அதனால் பதியாதமையைக் காரணமாகச் சொல்லுவது ஏன்? அப்படிப் பதியாத காலத்தில் மக்கள் பெருமளவில் வாக்களித்து நாம் வெற்றி பெற்றிருக்கிறோம். அதாவது தமிழரசுக் கட்சி ஒரு கட்சியாகவும் ஏனைய கட்சிகள் ஒன்றாகவும் கூடி முயற்சிகள் எடுத்ததையும் நாங்கள் அறிகிற பொழுது அது எங்களைத் தனிமைப்படுத்துவதாக இருந்துவிடக் கூடாது. ஒரு கட்சி அதில் விருப்பம் கொள்ளாது இருந்தால் நாம் கூட்டமைப்பைப் பதிவது சாத்தியமானதல்ல. ஆனால் அதற்கான புரிந்துணர்வுடன் நாம் செயற்படலாம் என்பதனை ஏற்றுக்கொண்டு தான் தேர்தல்களில் போட்டியிடுகிறோம். இப்போதும் புரிந்துணர்வு அடிப்படையில் செயற்படுவோம் என்று தான் சொல்கிறோம். இப்பொழுது சுரேஸ் பிரேமச்சந்திரன் வெளியே சென்று முன்பு எங்களோடிருந்த காலத்தில் பெற்ற வாக்குகளை விட மிகக் குறைந்தளவு வாக்குகளைப் பெறும் நிலையை அடைந்திருக்கிறார். அவரைத் திட்டமிட்டு வெளியேற்ற வேண்டும் என்ற கருத்து எம்மிடம் இருக்கவில்லை. இருக்கின்ற சூழ்நிலைகளை ஆராய்ந்து முடிவெடுக்கிறோம். தேசியப் பட்டியல் விடயங்களிலும் அப்படித்தான் செயற்படுகின்றோம். இணக்கமான உடன்பாடான நிலைமைகள் தொடருமாக இருந்திருந்தால் நாங்கள் தீர்வுகளைக் கண்டிருக்கலாம். அந்தத் தீர்வுகளுக்கு இடமில்லாமல் திரு.விக்கினேஸ்வரன் அவர்களைச் சந்தித்து (முன்பெல்லாம் அவரை விமர்சித்து மாவையாகிய நான் வர வேண்டும் என்று ஆதரவு தந்தவர்கள்) சம்பந்தன், சுமந்திரன் ஆகியோர்களுக்கு எதிராகச் செயற்பட்டு அவர்களைத் தோற்கடிக்க விக்கினேஸ்வரன் தலைவராக வர வேண்டும் என்று சொல்லி தன்னை சுரேஸ் பிரேமச்சந்திரன் இருமுறை சந்தித்துக் கேட்டுக் கொண்டதாக விக்கினேஸ்வரனே என்னிடம் தெரிவித்திருக்கிறார்.

அப்படியென்றால் எப்படி நாங்கள் இணைந்து ஒரு கட்சியில் வேலை செய்ய முடியும்? இதுதான் இடம்பெற்றிருக்கிறது. நாங்கள் எல்லோரும் ஒரு இணக்கத்தில் வேலை செய்ய வேண்டும் என்பதை நிராகரிக்கவில்லை. இப்பொழுது விக்கினேஸ்வரன் அவர்களுடன் கூட சேர்ந்து நிற்க முடியாமல் இருக்கின்றனர். உள்ளூராட்சித் தேர்தலில் ஆனந்தசங்கரியுடன் சேர்ந்து அந்தத் தேர்தலில் என்ன நிலையை அடைந்திருக்கிறார்கள் என்று தெரியும். இந்தத் தேர்தல் முறையில் எல்லோரும் வாக்குகளைப் பெற்றிருக்கலாம். அதை வைத்துக் கொண்டு எங்களைத் தோற்கடித்து விட்டதாக யாரும் சொல்ல முடியாது. 40 சபைகளிடத்தில் தனித்த பெரும்பான்மைக் கட்சியாகத்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இப்போதும் இருக்கிறது. அவர்கள் ஒரு இடத்தில் கூட தலைவராக வர முடியவில்லை. வந்த சந்தர்ப்பங்களைக் காங்கிரஸ் கட்சியினர் இழந்திருக்கிறார்கள். இது தான் நிலைமை. அதற்காக நாம் தோற்றுவிடக் கூடாது என்றோ அல்லது தோற்க மாட்டோம் என்றோ அல்லது வெற்றி பெற மாட்டோம் என்றோ விவாதித்துக்கொண்டிருக்கவில்லை. உலகில் மக்கள் மத்தியில் பெரும் வெற்றி பெற்றவர்கள் தோற்றிருக்கிறார்கள். தோல்வியடைந்தவர்கள் வென்றிருக்கிறார்கள். இவையெல்லாம் நடைமுறையில் சாத்தியமான விடயங்கள் தான். ஆனபடியால், நாம் இப்பொழுதும் கோட்பாட்டு அடிப்படையில், கொள்கை அடிப்படையில், ராஜதந்திர அடிப்படையில் ஒரு புரிந்துணர்வோடு வேலை செய்வதற்கு ஆயத்தமாக இருக்கிறோம்.

கேள்வி:

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் தமிழரசுக்கட்சியின் மேலாண்மை என்றதோடு, தமிழரசுக்கட்சிக்குள் சுமந்திரனின் மேலாண்மை உள்ளதாக செய்திகள் தொடர்ச்சியாக வருகின்றன. அரசியலமைப்பு உருவாக்க வழிகாட்டல் குழுவில் இருக்கும் இரண்டே இரண்டு தமிழ் அரசியல்வாதிகளாக சம்மந்தன் மற்றும் சுமந்திரன் இருக்கையில், மேற்கு நலன்களுக்கு அருட்டப்பட்டவராக, மேற்கின் நிகழ்ச்சி நிரலில் சுமந்திரன் இயங்குகிறார் என்றும் ஊடகங்களில் பல சர்ச்சையான பேச்சுக்களை அவர் பேசும்பொழுது, அவரது மேலாதிக்கத்தைத் தாண்டி, தமிழ்த் தேசிய அரசியலில் நெடுகாலம் பாடுபட்டு சிறையும் கண்ட நீங்கள் தமிழ்மக்களின் மனங்களை வென்றெடுக்கும் வகையில் எந்த எதிர்வினையும் ஆற்றாமலிருப்பது, தமிழ்த் தேசியத்தை நெஞ்சில் சுமப்பவர்களுக்கு வருத்தமளிப்பதாக உள்ளது. இதைச் சரிசெய்ய நீங்கள் முனையவில்லையா?

 பதில்:

வெளியிலிருந்து குற்றம் சுமத்துபவர்களின் பாணியில் நான் குற்றஞ் சுமத்தவில்லை என்பது சரி. சமந்திரன் தன்னுடைய சொந்தக் கருத்துகளையும் பல உண்மைகளையும் வெளியில் சொல்கின்ற பொழுது பத்திரிகைகளில் அவை புனைந்துரைக்கப்பட்டு அதில் உண்மையில்லாத செய்திகளைப் போட்டு அதைக் கட்டுரையாக்கி சுமந்திரனுக்கு எதிராக வெளியிடப்படுகிறது. அவர் ஒரு சிறந்த வழக்கறிஞராக, மொழியாற்றலுள்ளவராக இருக்கின்ற காரணாத்தினால் அவரை நாங்கள் பேச்சாளராக நியமித்திருந்தோம். அவர் தன்னுடைய கருத்துகளை முன்வைப்பதுதான் சில முரண்பாடுகளை உருவாக்கியிருக்கிறதே தவிர அவர் எடுத்த நடவடிக்கைகள் எல்லாம் பிழையென்று யாரும் சொல்ல முடியாது. அதைப் பத்திரிகைகள் கையாண்டிருக்கிற விதமும் அவருக்கு எதிரானதாகத்தான் மாறி இருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக நாம் வலிந்துதான் சுமந்திரனைக் கூட்டிக் கொண்டு வந்தோம். அவரும் திரு. கணேஸ்வரன் ஆகியோர் அடங்கிய வழக்கறிஞர்கள் குழாமும் யாரும் ஈடுபடாத அளவுக்குப் பெரும் முயற்சிகளைச் செய்திருக்கிறார்கள். அதற்கு அவர்கள் ஒரு தேநீர் கூட யாரிடமும் வாங்கிக் குடித்தது கிடையாது. காணி விடுவிப்புத் தொடர்பான வழக்குகளில் திரு. சுமந்திரன் மற்றும் திரு.கணேஸ்வரன் ஆகியோர் மிகத் திறமையாகச் செயற்பட்டிருக்கிறார்கள். என்னுடைய காணி வழக்குகளில் கூட அவர்கள் பல வெற்றிகளைப் பெற்றிருக்கிறார்கள். நிலங்களை விடுவிப்பது தொடர்பில் அரசாங்கத்திற்கு எதிராகவும் இராணுவத்திற்கு எதிராகவும் மிக உயரிய பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள்.

உச்ச நீதிமன்றில் வழக்காடியிருக்கிறார்கள். இன்றைக்கு 2176 வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் இருக்கின்றன. என்னுடைய நிலங்களை மீட்க வேண்டுமென்று அரசிற்கு எதிராக 2003 ஆம் ஆண்டு தொடுக்கப்பட்ட வழக்கில் 2007 ஆம் ஆண்டு எமக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதைவிட சாதாரணமாக மாணவர்களுடைய வழக்குகள், பட்டம் பெற்று வேலைவாய்ப்புப்பெற முடியாத 496 பேரின் வழக்குகள்…. எங்களுடைய கட்சி வழக்குகள்.. அப்படியான எத்தனையோ வழக்குகளில் அவர் ஒரு முன்னிலை வழக்கறிஞராகப் பல வழக்குகளில் வெற்றி பெற்றுத் தந்திருக்கிறார். அரசியலமைப்பு ரீதியாகவும் மிகச் சிறந்த முறையில் உச்ச நீதிமன்றத்தில் வாதாடி இருக்கிறார். அப்படிப் பார்க்கின்ற போது குறிப்பாக, ……அண்மையில் தமிழரசுக்கட்சிக்கு எதிராகவும், கட்சி யாப்பிற்கு எதிராகவும், அப்போது அதன் செயலாளராகவிருந்த எனக்கெதிராகவும் கட்சியைத் தடை செய்ய வேண்டும் என்றும் எங்களுடைய அரசியலுரிமையைப் பறிக்க வேண்டும் என்றும் கோரித் தொடுக்கப்பட்ட வழக்கில் கூட வழக்கறிஞர் திரு.கணகேஸ்வரனுடன் சேர்ந்து மிகச் சிறந்த முறையில் உச்சநீதிமன்றத்தில் வாதாடி இருக்கிறார். அந்த வாதாட்டத்தின் மூலம் தமிழரசுக் கட்சியைத் தடை செய்யக் கூடாது என்றும் அவர்கள் கனடா நாட்டின் கியூபெக் மக்கள் தொடர்பான வழக்கில் கனடாவின் சமஸ்டி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில், உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தமிழரசுக் கட்சியின் கோரிக்கைகள் சரியானவை என்றும் இதனடிப்படையில் இனச் சிக்கலிற்குத் தீர்வு காணப்பட வேண்டுமென்றும் தீர்ப்புக் கிடைத்தது. இலங்கையின் உச்ச நீதிமன்றம் இப்படியாகத் தீர்ப்பு வழங்கும் வகையில் எங்களுடைய இனத்திற்காக அவர் சிறப்பாக வாதாடி இருக்கிறார். இவரை நாங்கள் இலகுவாக விமர்சித்து………. விமர்சிப்பது பிழை அல்ல. தவறென்றால் தவறென்று நாங்கள் அவரிடம் பேசலாம். எது தவறு? எது சரி? அல்லது எப்படிப் பத்திரிகைகளிடத்தில் பேசலாம் என உரிய முறையில் சுட்டிக்காட்டி அவரோடு பேசி அவரை ஒரு வழிக்குக் கொண்டு வரலாம். அவர் அதற்கு மாறானவர் அல்ல. ஆனபடியால், இவ்வாறானவர்கள் தமிழரசுக் கட்சியில் இருந்தால் தங்களுடைய அந்தஸ்துக் குறைந்து விடும் என்று நினைக்கும் பொறாமைத்தனமானவர்களும் காழ்ப்புணர்ச்சியாளர்களும் இருக்கிறார்கள். உண்மையாகவே தவறுகள் ஏற்பட்டால் எங்களுடைய கட்சியின் உயர்மட்டக் குழுவால், அரசியற் குழுவால் அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் நாங்கள் அவரை நேரடியாக வைத்துக் கொண்டு பேசி அவரைத் திருத்தியெடுக்கலாம். அவர்களை இழக்கக் கூடாது என்பது தான்…… எப்படிச் சர்வதேசத்துடன் நாங்கள் இணைந்து சொல்பவர்கள் இருக்க….. நாம் சர்வதேசத்துடன் இணைந்து செல்கிறோமோ… அதேபோல இப்படியான ஆற்றலுடையோர்களும் எங்களுடைய கட்சியில் இருந்து வேலை செய்ய வேண்டும். திருத்த வேண்டுமானால் திருத்தலாம்….. வழிநடத்த வேண்டுமானால் வழிநடத்தலாம்……..அப்படியானவர்களும் பயன்பட வேண்டும் என்பது தான் எங்கள் கருத்தாக இருக்கிறது.

நூற்றுக்கு நூறு புனிதமானவர்கள், சரியானவர்கள் என நாம் யாரையும் குறிப்பிட்டுப் பேச முடியாது. அப்படிப் பேச வேண்டிய அவசியமும் கிடையாது. தவறுகள் இருக்கும். செய்வது  எல்லாம் சரி எனவும் நாம் வாதிட வரவில்லை. ஆனபடியால் இப்படியாக நாம் பேசுவதை விட, அப்படிப்பட்ட சிறந்த வழக்கறிஞர்கள், சட்ட அறிஞர்கள், அரசியலமைப்புத் தொடர்பில் அறிவுள்ளவர்கள், ஆற்றல்களுடையவர்கள் போன்றோர் எமது கட்சியில் இருந்து வேலை செய்ய வேண்டும். என்ற ஒரு அணுகல்முறையைத் தான் நாம் கொண்டிருக்கிறோம். ஆனபடியால், குற்றங்களைச் சொன்னால் நாம் பேசித் தீர்த்துக்கொள்ளலாம். அது எங்கள் கடமை.

Be the first to comment

Leave a Reply