ஊடகங்களின் அரசியலும் மக்களின் நுகர்திறனும் –முத்துச்செழியன்-

June 29, 2023 Admins 0

எம்மைச் சூழநிகழ்வன பற்றிய புரிதலிலிருந்தே இவ்வுலகப்போக்கைப் புரிந்துகொள்ளவும், சமூகப்போக்கை ஏற்றிடவும் மாற்றிடவும் இயலும். ஊடகங்களின் வாயிலான கருத்தேற்றங்கள் ஒவ்வொருவரினது பார்வையையும், நுகர்வுத் தெரிவையும் ஆளுகை செய்வனவாக உள்ளன. நுகர்தல் என்பது உண்ணுதலும், உடுத்தலும் என்பதைத் தாண்டி வாசித்தலும், கேட்டலும், பார்த்தலும் என … மேலும்

வரலாற்று ஒப்புநோக்கில் ஈழமும் தமிழ்நாடும் – பாகம் 7

June 28, 2023 Admins 0

தமிழ்மொழி வரலாற்றில் ஈழத்தின் புலமைமரபு

தமிழ்நாட்டிற்கும் தமிழீழத்திற்குமான உறவுநிலை எத்தகையது என்ற புரிதலினை இக்காலத் தமிழர் அறிந்துணர வேண்டுமெனின் தமிழ்மொழி வளர்ச்சிக்கும் அதனது புலமைத் தொடர்ச்சிக்கும் ஈழத்தார் எத்துணை பங்களித்தனர் என்பதைப் பற்றி தெரிந்துகொள்ளல் வேண்டும். தமிழ்நாட்டினைக் கொள்ளயடித்தலையும் சூறையாடலையும் மட்டுமே … மேலும்

வரலாற்று ஒப்புநோக்கில் ஈழமும் தமிழ்நாடும் – பாகம் 6

June 27, 2023 Admins 0

ஈழத்தின் தமிழராட்சி

சோழர் ஆட்சியின் எழுச்சியாக, கி.பி 993 இல் இராசராசசோழன் தமிழரிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றி ஆண்டு வந்த சிங்கள ஆட்சியரை வீழ்த்தி ஈழத்தின் பொலநறுவையைத் தலைநகராகக் கொண்டு மும்முடிச் சோழமண்டலம் எனப்பெயரிட்டு ஈழத்தின் பெரும்பகுதியில் ஆட்சிபுரிந்ததோடு, இராசராசசோழனின் மகனான இராசேந்திரசோழன் … மேலும்

வரலாற்று ஒப்புநோக்கில் ஈழமும் தமிழ்நாடும் – பாகம் 5

June 26, 2023 Admins 0

தமிழிலக்கியங்களில் ஈழம்

ஈழம் எப்பெயர்களால் வரலாற்றில் பதிவாகியுள்ளதென்பதையும் அவற்றின் பழைமை எத்தன்மையிடத்து என்பதையும் அறிவது ஈழத்தின் தொன்மை பற்றிய புரிதலுக்கு இன்றியமையாதது. தமிழீழத்தின் பூநகரியில் கிடைத்த தொல்லியல் எச்சமான மட்பாண்ட ஓட்டில் “ஈழ” என்ற சொல் காணக்கிடைக்கிறது என்பதுடன் காலக்கணிப்பில் அது … மேலும்

வரலாற்று ஒப்புநோக்கில் ஈழமும் தமிழ்நாடும் – பாகம் 3

June 7, 2023 Admins 0

(I) வரலாற்று ஒப்புநோக்கில் ஈழமும் தமிழ்நாடும் – பாகம் 1

(II) வரலாற்று ஒப்புநோக்கில் ஈழமும் தமிழ்நாடும் – பாகம் 2

ஈழத்தின் நிலவியற்றொன்மையும் கடலிடைபுகுதலும்

வரலாற்றிற்கு முற்பட்ட காலந்தொட்டுத் தமிழர்களின் வாழிடத்தொடர்ச்சியாகவே இன்றைய தமிழ்நாடும் ஈழமும் இருந்துவந்துள்ளனதென்பதை நிலவியல் மற்றும் … மேலும்

வரலாற்று ஒப்புநோக்கில் ஈழமும் தமிழ்நாடும் – பாகம் 2

June 3, 2023 Admins 0

தமிழகப் பொதுப்புத்தியில் ஈழத்தமிழும் ஈழத்தமிழரும்

(I) வரலாற்று ஒப்புநோக்கில் ஈழமும் தமிழ்நாடும் – பாகம் 1

தமிழீழத்தினதும் தமிழ்நாட்டினதும் உறவுநிலை பற்றிய பொதுவான பார்வையென்பது காலனியக் கொள்ளையர்கள் வரைந்த எல்லைப் பிரிப்புகளிற்கு வெளியே இன்னும் விரிவடையவில்லை என்பது தமிழீழ மக்களின் வரலாற்றிற்குப் … மேலும்

வரலாற்று ஒப்புநோக்கில் ஈழமும் தமிழ்நாடும் – பாகம் 1

May 30, 2023 Admins 0

வரலாற்று ஒப்புநோக்கில் ழமும் தமிழ்நாடும் – பாகம் 1

ஈழ அரசியலின் நிகழ்காலப் போக்கு

உலகெங்கும் தமிழ்த்தேசிய இனத்தவர் பரவி வாழ்ந்து வந்தாலும் அவர்களின் அடிவேரானது தமிழ்நாட்டிலோ அல்லது தமிழீழத்திலோ தான் இருக்கும் என்ற உண்மையை மனதிற்கொள்ளும் அதேவேளையில் தமிழ்த்தேசிய … மேலும்

தமிழ்த்தேசிய அரசியலின் முதன்மை எதிரி இந்துத்துவ அரசியலே ! -முத்துச்செழியன் –

March 29, 2023 Admins 0

தமிழீழதேசமானது முற்றாக வன்கவரப்பட்டதன் பின்பாக உள்ள இந்த 14 ஆண்டு காலப்பகுதியில் ஈழத்தில் தமிழரது அரசியல், சமூக, பொருண்மிய இருப்பென்பது வெறிதான ஒரு நிலையிலேயே இருக்கின்றது எனலாம். விடுதலைக்காகப் போராடிய சமூகத்திடம் இயல்பாக ஊறித்திளைத்திருக்க வேண்டிய பண்புநிலைகள் எவையும் ஈழத்தமிழரின் வாழ்நிலையில் … மேலும்

பொட்டம்மான் அகவை 60

November 28, 2022 Admins 0

வெளியில் தெரியாத
விளக்கே உளவின்
உளியில் எமை வார்த்த
கிழக்கே
எளிதில் புரியாத
மலைப்பே தமிழன்
அழியாப் புகழொற்றின்
தலைப்பே

பெருங் கடலின் அடியில்
பெயரின்றி ஓடிநின்ற
உருவங் காட்டாத ஆறே
ஒன்றாக நின்றோர்க்கு
உருகும் மெழுகாகி
உள்ளத்தைக் காட்டுமோர் பேறே… மேலும்