மருத்துவம் தொடர்பாக தமிழ்த்தேசியத்தின் நோக்கு – சேதுராசா-

April 11, 2020 Admins 0

தமிழ்த்தேசியம் என்பது தமிழர்களின் விடுதலைக்கான அரசியல் என்பதோடு, அது ஒரு வாழ்வியலாகவும் பன்னெடுங்காலமாக தமிழர்களிடத்தில் வளர்ந்தும் செழுமையுற்றும் வந்ததோடு, உலகின் பல்வேறு தேசிய இனங்களிற்கு செழுமையான வாழ்நெறியையும் கற்றுக்கொடுத்தது எனக் கூறுவது மிகையன்று. இவ்வாறாக, தமிழர்கள் வரலாற்றின் வழி பண்டுதொட்டு தமிழர்தாயக … மேலும்

குர்தித்தான் விடுதலைப் போராட்டத்திலிருந்து தமிழர்கள் கற்றுணர வேண்டியவை – சேதுராசா-

October 28, 2019 Admins 0

துருக்கியிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியதைத் தொடர்ந்து ஏலவே எதிர்பார்த்தவாறு துருக்கியின் அரச படைகள் துருக்கி- சிரிய எல்லைப் பகுதிகளினூடாக சிரிய எல்லைக்குள் சென்று குர்திய மக்களின் தாயக நிலப்பரப்புகளை மீண்டும் வன்வளைத்து குர்திய மக்களை நூற்றுக் கணக்கில் படுகொலைசெய்து பல்லாயிரக்கணக்கான குர்தியர்களை … மேலும்

தமிழரின் தொன்மை – முனைவர் ஜெ.அரங்கராஜ்-               

September 20, 2019 Admins 0

தமிழர்கள்  தமிழ்நாட்டையும் இலங்கையையும் தாயகமாகக்கொண்டு வாழ்ந்து வருபவர்கள். இவர்களுடைய தொன்மையான தாயகம் எது? என்பது குறித்து ஆய்வாளர்களிடையே பல்வேறுபட்ட ஐயப்பாடுகள் நிலவி வருகின்றன. பல்வேறுபட்ட கருதுகோள்கள் தமிழரது தொன்மை குறித்து நிலவிவருகின்றன. பொதுவாக 3 வகையான கோட்பாடுகள் தமிழர்களின் தாயகம்குறித்து ஆய்வாளர்களிடையே … மேலும்

சிறிலங்காவின் சனாதிபதித் தேர்தல் நிலைவரங்கள் தொடர்பான தெளிவூட்டல்கள் -சேதுராசா-

September 2, 2019 Admins 0

நடைபெற இருக்கும் சிறிலங்காவின் எட்டாவது சனாதிபதித் தேர்தல் குறித்துப் பேசுவதிலேயே ஊடகர்களும் அரசியல் நோக்கர்களும் தமது கூடுதலான நேரத்தைச் செலவிடுவதனூடாக தமிழ் மக்களையும் அவ்வாறான உரையாடல்களில் ஆர்வமடையச் செய்து வருகின்றனர். உண்மையில் சிங்களதேசம் தனது சனாதிபதியைத் தெரிவு செய்வதில் காட்டும் ஆர்வத்திற்கு … மேலும்

இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்கு வித்திட்டுச் சிறைப்பட்ட ஈழத்தடிகள் -முனைவர் அரங்கராஜ்-

July 23, 2019 Admins 0

வரலாற்றுக்காலம் தொட்டே தமிழ்ச் சமூகத்தின் தேசிய இயங்கியல் பாதிப்படையும் போதும் அயல் வல்லாண்மை அரசுகள் தமிழரின் மேல் ஏறிய போதும் தமிழ்த் தேசிய இயங்கியலை ஒரு சிறு கூட்டம் வழி நடத்தி இன்றளவும் அதனைப் பாதுகாத்துத் தக்கவைத்துள்ளதெனலாம். இக் கூட்ட மரபு … மேலும்

காலனிய அடிமை மனநிலை    – செல்வி-

April 10, 2019 Admins 0

ஒரு இனத்தின் இருப்புக்கு அவர்களின் நிலம், மொழி, ஒத்த பண்பாடு என்ற வெளித்தெரியும் வாழ்வியல் தொடர்ச்சிகள் அடிப்படையாக இருப்பினும் அந்த இனத்தின் மனநிலையின் கூட்டுணர்வு தான், அந்த வாழ்வியல் தொடர்ச்சிகளின் இயங்கியல் தளமாக இருக்கும். இனம், மொழி, நிலம் என்ற மனநிலையின் … மேலும்

“இந்தியாவின் மகிந்த ராயபக்ச” என்ற மறக்கக் கூடாத உண்மையை சீனப் பூச்சாண்டிப் பரப்புரை மறக்கடிக்குமா? –மறவன்-

November 7, 2018 Admins 0

தெற்காசியாவில் ஒரு தேசிய இனம் விடுதலையடைவதை தேசிய இனங்களைச் சிறைப்படுத்தி வைத்திருக்கும் தேசிய இனங்களின் சிறைக்கூடமான இந்தியா ஒரு போதும் ஏற்காது. அத்துடன் தமிழர்களின் மீதான ஆரியமாயையான இந்தியாவின் வரலாற்றுப் பகை என்பது எச்சான்றும் குறைத்து மதிப்பிட இயலாது. அண்டை நாடுகள் … மேலும்

உதிரி அரசியல் முன்னெடுப்புகளால் அலைச்சல்கள் அதிகமாகிச் சலுப்புற்று நடப்பன நடக்கட்டும் என்ற ஒதுங்குநிலைக்கே  போக நேரும்- -காக்கை-

August 28, 2018 Admins 0

கடந்த 2 மாதங்களாக தமிழீழ மண்ணில் நடந்தேறி வருவன கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு ஆர்முடுக்கிவிடப்பட்டதையும் அதன் தீவிரத்தன்மை முழுவீச்சுப்பெற்று வருவதையுமே காட்டுகின்றன. ஆனாலும் இவை பற்றிய முழுமைப்பாங்கான பார்வையும் இவற்றிற்கெதிரான சரியான அரசியலை முன்னிறுத்தி செயற்பாடுகளை முன்னெடுக்கக் கூடிய தெளிவுமின்மையும் ஆற்றல் வளமின்மையுமே … மேலும்

இந்திய மாயையில் மூழ்கியிருக்கும் அல்லது இந்திய வலையில் வீழ்ந்திருக்கும் ஆண்டிப் பண்டாரங்களின் பித்தலாட்ட அரசியல் –மறவன்-

January 31, 2018 Admins 0

இலகு புரிதலுக்கும் நினைவில் நிறுத்தலுக்கும் வினா விடைக் கல்வி முறைமை உதவியாக உள்ளது என்பது கல்வியியலாளர்களின் கருத்து. ஈழத் தமிழர் அரசியல் பரப்பில் ஆய்வாளர்கள் என்று கூறப்படுவோரில் பெரும்பாலானோர் அடங்கலாகப் பலருக்கு அரசியல் வரட்சியும் புரிதலின்மையும் மறதியும் மிகவும் கூடுதலாகவிருப்பதால் இந்த … மேலும்

புவிசார் அரசியலும் தமிழீழமும் (Geopolitics & Tamileelam)- -தம்பியன் தமிழீழம்-

December 9, 2017 Admins 0

தற்போதெல்லாம் புவிசார் அரசியல் பற்றிப் பேசுவது அரசியலில் ஆழ்ந்த புரிதலற்றோரிடத்தில் கவர்ச்சிகரமானதாகப் பார்க்கப்படுவதோடு இது குறித்து பேசுபவர்கள் இது குறித்து பரந்தளவில் ஆய்வறிவற்றவர்களாகவே இருக்கின்றனர். ஐ.நாவிடம் போய் முக்கிப் பெற முடியும் என்று சொல்லப்பட்ட தமிழர் உரிமைகள் (அந்த மடைமை வெளிப்பட்டுப்போக) … மேலும்