பணிநிலை வேண்டுகை

February 20, 2017 Admins 0

தமிழ்த் தேசிய ஆய்வுப் பள்ளியினை ஆரம்பிப்பதை நோக்கியதான முதற்கட்ட இணைப்புப் பணிகளை ஒழுங்கு செய்வதற்காக www.kaakam.com என்ற இணைய முகவரியை உடைய இணையத் தளத்தை ஆரம்பித்தோம்.

இதற்காக, நீண்ட பரப்புக்களில் நுண்ணிய பல ஆய்வுகளைச் செய்ய வேண்டிய தேவையை நன்குணர்ந்து எமது … மேலும்

பலவீனமான தேசிய இனத்தின் பலமான போர் வடிவமாகவல்ல பொருண்மியப் போர்முறை (Economic Warfare) – தம்பியன் தமிழீழம்

February 14, 2017 Admins 0

உலகில் தேசிய இனங்களின் தன்னாட்சிக்கான போராட்டங்கள் சூழ்ச்சிகளாலும் கழுத்தறுப்புக்களாலும் ஒடுக்குமுறை அரச இயந்திரத்தின் ஈவிரக்கமற்ற அரச பயங்கரவாத நடவடிக்கைகளாலும் ஒடுக்கப்பட்டு, நசுக்கப்பட்டு, ஈற்றில் அந்த தேசிய இனம் தனது தலைவிதியைத் தானே தீர்மானிக்கும் ஆற்றலின்றியதாக்கப்பட்டு, மாற்றாரின் வருகைக்காகவும் ஒடுக்குமுறையாளர்களின் தயவுக்காகவும் கையேந்திக் … மேலும்

தமிழர்களிடையே உட்பகையும் அகமுரணும் : கற்க மறந்த பாடங்கள் – செல்வி

February 12, 2017 Admins 0

தொன்மைத் தமிழ்த்தேசிய இனத்தின் இருத்தலின் தொடர்ச்சியானது இனத்தின் மரபியலின் கூறுகளினைப் பற்றி போர் என்ற புள்ளியினால் இன்னமும் எழுதப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அடையாளத் தொலைப்பும் அடையாள மீட்புமென போரின் இருபெரும் கூறுகளும் தமக்குள்ளே முரண்பட்டு, இருப்பிற்கான தடங்களை பதித்து முடிவிலி தூரத்தில் ஓடிக்கொண்டிருந்தாலும், … மேலும்

கிழக்கின் உணர்வுகளை புரிதலிலேயே தாயக விடுதலைதங்கியிருக்கிறது. தெரிதலின் தடுமாற்றந்தணிய உளப்பாங்கினை செம்மையாக்குங்கள்! – கொற்றவை

February 8, 2017 Admins 0

      வெள்ளைநிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ

      வள்ளலடியிணைக்கு வாய்த்த மலரெதுவோ?

      வெள்ளைநிறப்பூலுமல்ல வேறெந்த மலருமல்ல

      உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது! – விபுலானந்தர்

ஒரு மண்ணின் மாண்பு ,  மொழியின் அடியாழம் ,அதன் பழக்கவழக்கங்கள், உயரிய பண்புகள், இழப்புகள், ஈகைகள் எதுவென்றாலும், அதன் … மேலும்

தூரத்தில் இருக்கின்ற தோழனுக்கு! – திரு

February 5, 2017 Admins 0

இப்போதும் உன் பெயரைச் சொல்லி விட முடிவதில்லை

எப்போதும் அது உள்ளே ரகசியமாய் இருக்கட்டும்

 

மீளுவதென்பதுவோ மிகக் கடினம் எனத்தெரிந்த

ஆழ ஊடுருவும் படையணியின் கூட்டமொன்றில்

இந்த முறையேனும் எனக்கிந்தச் சந்தர்ப்பம்

தந்தாக வேண்டுமென்று அடம்பிடித்தாய் ஆனாலும்

 

நாலு … மேலும்

உரிமைகேட்டு போராடுவது குற்றமல்ல தமிழினமே! – துலாத்தன்

February 5, 2017 Admins 0

2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் உருவெடுத்துவரும் மக்களின் பல பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் இழுபறிப்பட்டுக் கொண்டே வருகின்றது. இதற்கான காரணங்களாக திறமையற்ற அதிகாரிகள், ஊழல் நிறைந்த நிர்வாகமுறை, பொறுப்பற்ற அரசியல்வாதிகள் எனப் பட்டியற்படுத்தினாலும் எல்லாவற்றிற்கும் மேலாக மிக முக்கிய காரணம் மக்களின் விழிப்புணர்வற்ற … மேலும்

எச்சைகளின் ஏற்றங்களுக்கு நாமிடும் பிச்சைதான் காரணமெனின் தயங்காது துடைத்தெறியுங்கள்-கொற்றவை

January 29, 2017 Admins 0

“கற்கை நன்றே கற்கை நன்றே

பிச்சை புகினும் கற்கைநன்றே” நறுந்தொகை 35

மனித இனம் முன்னேற்றமடைய கல்வி கற்றல் என்பது முக்கியமானது என எமது பழந்தமிழ் நூல்கள் பலவும் பறை சாற்றுகின்றன என்பது முக்கியமான விடயம். ஆனால் அந்தக் கல்வி முறை … மேலும்

திரும்பலுக்கான சத்தியம் – திரு

January 27, 2017 Admins 0

எம்முடைய பறப்பின்
கதை என்பது
சத்தியத்தின் கதை
அல்லது
திரும்பலுக்கான சத்தியம்

எமக்கெதிரே மோசமான
பருவங்கள் உருவாகின்ற போது
சுதந்திரமாய் வாழ்தல் என்ற
ஒற்றைக் காரணத்துக்காக
பல்லாயிரக் கணக்கான
மைல்களையும்
பல லெட்சம் இடர்களையும்
ஊடறுத்துப் பறக்கிறோம்

எங்கள் வாழ்வின் மீதான… மேலும்

ஈழத்தமிழின விடுதலையின் முதன்மை எதிரி இந்தியாவே – தம்பியன் தமிழீழம்

January 27, 2017 Admins 0

ஒரு தேசம் என்பது ஒரு பொதுவான மொழி, தொடர்ச்சியான நிலப்பரப்பு, பொருண்மிய வாழ்வு மற்றும் பொதுப் பண்பாட்டில் வெளிப்படும் பொதுவான மன இயல்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வரலாற்று ரீதியாக உருவாகிய நிலையான மக்கள் சமூகமாகும் என வரையறுக்கப்படுவதற்கு அச்சொட்டான எடுத்துக்காட்டாக … மேலும்

மொழியின் அரசியலும் பண்பாட்டியலின் இயங்குநிலையும் : படைப்புத்தளத்தின் மீதான பார்வை – செல்வி

January 22, 2017 Admins 0

இனவியலின் தொடர்ச்சியையும் தொடர்ச்சியின்மையையும் தீர்மானிக்கின்ற இனம்சார் அடையாள அரசியலை ஒரே நேர்கோட்டில் பிணைத்து, அந்த இனவியலின் இருத்தலை சாத்தியமாக்குகின்ற விடயங்கள் மொழியும் பண்பாடுமேயாகும். மரபுவழித் தேசியமான தமிழினத்தின் இருப்பினை பல சகாப்தங்கள் கடந்தும் இன்னமும் நிலைநிறுத்தியிருப்பதில் பெரும் பங்கு தமிழ் மொழிக்கு … மேலும்