கலை இலக்கியப்போலிகளும் கூலிகளும்:- வெந்து நொந்து கொண்டிருக்கும் ஈழத்தின் படைப்புத்தளம் -செல்வி-

August 16, 2017 Admins 0

படைப்புவெளியின் அசைவியக்கத்தில் காலத்துக்குக் காலம் கலையும் இலக்கியங்களும் மக்களுடைய வாழ்க்கையை பதிவுசெய்தல் என்னும் அழகியல் வழியான படைப்புத்தளத்தைக் கொண்டிருந்தன.  ஆரம்பகாலங்களில் மாந்தர்களுடைய சொந்தப் புகழ்பாடுதலும், மேட்டிமைப்பாங்கினைத் துதித்தலும், தற்புகழ்ச்சியும் என ஒரு குறுகிய வெளியில் பரந்த கலை இலக்கியப்படைப்புக்களைப் படைத்துச் சென்றன. … மேலும்

குண்டுச்சட்டிக்குள் குதிரையோடும் மண்குதிரைக் காவலர்கள் தமிழ்த்தேசியத்திற்கு சாபக்கேடு  -மறவன் –

August 6, 2017 Admins 0

 “பொருண்மியம் அரசியலைத் தீர்மானிக்கும். அரசியல் ஏனையவற்றையெல்லாம் தீர்மானிக்கும்” என்ற அரசியல் விஞ்ஞானத்தின் அரிவரியை உள்வாங்கியவர்களாக “இதில் அரசியல் இல்லை” என்பது எல்லாவற்றிலும் பார்க்க நுண்ணரசியல்  என்பதனையும், “இவர் அரசியலுக்கு அப்பாற்பட்டவர்” என்று சொல்வது அவருடைய அரசியல் பின்னணியை மறைப்பதற்கான அரசியல் என்பதனையும், … மேலும்

வினோதவுடைப்போட்டி சேகுவாரோக்களும் அவர்களது கனரக ஆயுதங்களான சமூக வலைத்தளங்களும் தமிழ்த்தேசியத்தின் சாபக்கேடுகள். – அருள்வேந்தன்

July 26, 2017 Admins 0

கடந்த காலங்களில் தமிழ்த் தேசியப் பரப்பில் சம்பவங்களின் பதிவுகள் ஊடகங்களாலும் ஊடகர்களாலும் சமூக பிரக்ஞையுடன் முழுமையான சம்பவங்களாகப் பதிவுசெய்யப்பட்டிருக்கும். ஆனால் தற்போதைய ஊடகங்களில் குறிப்பிட்ட சம்பவங்கள் தொடர்பான அனுமானங்களும் நயவஞ்சகக் கருத்தூட்டல்களும் சமூக வலைத்தளங்களில், குறிப்பாக அரசியல் பதிவுகளை அரசியல் தெளிவில்லாத, … மேலும்

லண்டனில் இடம்பெற்ற “காக்கை” இதழ் அறிமுக நிகழ்வில் ஊடகவியலாளர் இரவி அருணாசலம் ஆற்றிய உரை

July 16, 2017 Admins 0

நிகழ்கால அரசியலும் ஊடகங்களின் செல்நெறியும்

இரவி அருணாசலம்.

வணக்கம் நண்பர்களே,

‘நிகழ்கால அரசியலும் ஊடகங்களின் செல்நெறியும்’ என்பது தலைப்பு. நிகழ்காலம் என்றால் அதன் ஆண்டுக்கணக்கை வரையறை செய்யவேண்டும். நிகழ்காலம் என்பது ஈழத்தில் ஆயுதப்போர் நிகழ்ந்த முப்பது வருடங்களையும் உள்ளடக்குமா அல்லது அதன்

மேலும்

பண்பாட்டு மீட்சியே புரட்சிகர சக்திகளாக தமிழ் மக்கள் அணியமாதலை உறுதிப்படுத்தும்- செல்வி

July 2, 2017 Admins 1

பண்பாட்டு அரசியல், அடையாள அரசியல் போன்ற சொல்லாடல்களும் அவை தொடர்பான உரையாடல்களும் பின் நவீனத்துவச் சிந்தனையாளர்களின் வழி வந்து சேர்ந்திருப்பினும் மூன்றாம் உலக நாடுகளிலும் தொன்மை மரபுவழித் தேசிய இனங்களின் இருப்பிலும் அவற்றின் இருப்பின் அடையாள அரசியலிலும் பண்பாட்டு அரசியல் என்பது … மேலும்

காகம் வெறும் இணையமல்ல எதிர்கால தமிழ்த் தேசிய சிந்தனைப்பள்ளி

July 2, 2017 Admins 0

அன்பிற்குரிய உறவுகளே!

தமிழ்த் தேசிய உறுதிமொழியை கேட்க இந்த இணைப்பில் செல்லவும் – தமிழ்த் தேசிய உறுதிமொழி

தமிழ்த்தேசிய கருத்தியலை பேசும் அமைப்புகளோ, கட்சிகளோ, தனி நபர்களோ தமிழீழம் தான் தமிழருக்கான தீர்வு என்பதை நம்பினால் மட்டுமே அவர்கள் தமிழ்த் தேசியத்தைப் … மேலும்

கூட்டமைப்பைப் புரிந்துகொள்ளாத மக்களும் மக்களைப் புரிந்துகொள்ள மறுக்கின்ற கூட்டமைப்பும் -தம்பியன் தமிழீழம்-

June 15, 2017 Admins 2

பாராளுமன்ற அரசியலையும் தேர்தலையும் ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தித் தமிழ் மக்கள் தமது ஒருமித்த உணர்வை வெளிப்படுத்துவதற்காகத் தமிழ்த் தலைமைகள் தம்முள் அகமுரண் களைந்து 2001 ஆம் ஆண்டில் உருவாக்கிய கூட்டமைப்பே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகும். விடுதலைப் புலிகளின் தலைமையிலான தமிழீழ விடுதலைப் … மேலும்

ரொஹான் குணரட்ணவின் நிகழ்ச்சி நிரலுக்குள் சிக்கிவிட்டதா ஐபிசி பத்திரிகை – ஆதவன்

June 4, 2017 Admins 0

நிராஜ் டேவிட் போன்ற மூத்த ஊடகவியலாளர்கள் லிபரா போன்ற பெரும் வணிக முதலாளிகளின் தாளத்திற்கேற்றாற் போல் அவர்களின் விளம்பர நலன்களிற்காக தமிழீழ விடுதலைப்போராட்டத்தை இழுக்கான  சர்ச்சைகளுக்குள் இழுத்துவிட்டு வேடிக்கை பார்க்கும் அர்ப்பத்தனமான சோரம்போதலை தமிழ்ச் சமூகம் அனுமதிக்க முடியாது. நிராஜ் டேவிட் … மேலும்

தமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி

May 21, 2017 Admins 1

மனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி, குறிகளின் தொகுப்புக்கள் மொழியாகி, இன்று இனக்குழுமங்களை அடையாளப்படுத்தும் குறிகாட்டிகளாக நிற்கின்றன. காலந்தோறும் மானிடர்களின் பரிணாம வளர்ச்சி இயற்கையுடன் இயைந்ததாகவே கட்டியமைக்கப்பட்டிருக்கின்றது. அந்த மானுட இயக்கத்திற்கும் இயற்கையும் இயங்கியலுக்குமிடையிலேயே மனித சமூகத்தின் … மேலும்