பணிநிலை வேண்டுகை

தமிழ்த் தேசிய ஆய்வுப் பள்ளியினை ஆரம்பிப்பதை நோக்கியதான முதற்கட்ட இணைப்புப் பணிகளை ஒழுங்கு செய்வதற்காக www.kaakam.com என்ற இணைய முகவரியை உடைய இணையத் தளத்தை ஆரம்பித்தோம்.

இதற்காக, நீண்ட பரப்புக்களில் நுண்ணிய பல ஆய்வுகளைச் செய்ய வேண்டிய தேவையை நன்குணர்ந்து எமது வேலைத் திட்டங்களை வகுத்துள்ளோம். தமிழ்த் தேசிய ஆய்வுப் பள்ளி என்ற நிலைக்கு நாம் எமது ஆய்வாற்றல்களை வளர்த்தெடுக்க, புலமையாளர்களும் கள அனுபவம் உடையவர்களும் அவசரமாக எமக்குத் தேவைப்படுகின்றார்கள்.

கீழ்வரும் ஆய்வுப் பரப்புக்களில் ஆய்வுகளைச் செய்வதற்காக, பல்கலைக் கழகங்களில் குறிப்பிடத்தக்க ஆய்வுகளைச் செய்து அனுபவமுள்ள புலமையாளர்களையும், களநிலை ஆய்வுகளை மேற்கொள்ளவல்ல செயற்பாட்டாளர்களையும் எம்மைத் தொடர்புகொள்ளுமாறு வேண்டி நிற்கின்றோம்.

 • பன்னாட்டு முதலீடு (International Investment)
 • கடற்றொல்லியல் (Marine Archaeology)
 • நாடற்ற தேசியங்களின் பொருண்மிய அபிவிருத்தி மற்றும் வளர்ச்சி (Economic Development & growth in stateless nations)
 • அடக்குண்ட இனக் குழுக்களின் வருமானம் மற்றும் செல்வங்களினைப் பாதிக்கும் காரணிகள் (Factors affecting income & wealth in an oppressed ethnic group)
 • பொருண்மிய இராசதந்திரம் (Economic Diplomacy)
 • இராசதந்திர சட்டம் (Diplomatic Law)
 • இராணுவம், பாதுகாப்பு மற்றும் பொதுச் சொத்துக்கள் தொடர்பான சட்டங்கள் (Laws with regard to Military, Defense and Public Property)
 • சமூகப் பள்ளிகள் (Community Schools)
 • புவியியற் பொறியியல் (Geological Engineering)
 • தொடர்பாடல் வலையமைப்புகள் (Communication Networks)
 • புவிசார் அரசியல்(Geopolitics)
 • சமூகப் பிறழ்ச்சி மற்றும் வெகுசன உளநிலை (Social Dysfunction & Mass hysteria)
 • எண்ணங்களைச் சிறிலங்கமயப்படுத்தல் என்ற நுண்ணிய இனச்சிதைப்பு (Sinhalization of thoughts as Delicate Ethnic Mutilation)

குறிப்பு 1-

ஆய்வுத் தலைப்புக்கள் கூடி முடிவெடுக்கப்படும்

குறிப்பு 2-

உங்களிற்கான தொழில்முறைக் கட்டணத்தை வழங்கும் இயலுமையில் நாம் இன்று இல்லாவிடினும், ஆய்வுகளை சமூக உணர்வுடன் மேற்கொள்ள முன்வரும் உங்களது ஆய்வுகளுக்குத் தேவைப்படும் செலவை நாம் பொறுப்பேற்பதோடு, முடிந்தளவில் எமது இயலுமைக்கேற்றவாறான ஊதியத்தை நாம் வழங்குவோம் என உறுதியளிக்கின்றோம்.

பிரதான ஆய்வாளர்களாக பணியாற்றவிரும்புபவர்கள், கல்வித்தகமை அல்லது ஆய்வுக்களப்பணி அனுபவம் இருப்பின் உங்களின் விபரங்களை எமது மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்.

பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்களும், பாடசாலை கல்வியை முடித்துவிட்டு வேலை தேடும் இளைஞர் யுவதிகளும் ஆர்வம் இருப்பின் உங்கள் விபரங்களை அனுப்புங்கள். ஆய்வுப் பணிகளில் உங்களையும் இணைத்து பயிற்சி வழங்க திட்டங்கள் வகுக்கப்ட்டுள்ளன.

தொடர்புக்கு- kaakammedia@gmail.com

இணைப்பாளர்கள்,

தமிழ்த் தேசிய ஆய்வுப்பள்ளி

Be the first to comment

Leave a Reply