
தமிழினப் படுகொலைகள் குறித்து பல்வேறு தரப்பினரும் ஆவணப்படுத்தியுள்ளனர். இவற்றில் விடுதலைப்புலிகளின் ஆவணப்படுத்தல்கள், வடகிழக்கு மனித உரிமைகள் செயலக ஆவணங்கள் மற்றும் மணலாறு விஜயனின் நூல்கள் முக்கியமானவை.
ஈழத் தமிழ்த் தேசிய இனத்தின் இளைஞர் யுவதிகள், இந்த இனம் மீதான அழிப்புகள் குறித்து ஞாபகப்படுத்திக் கொள்வதற்காக “மனிதம் வெளியீட்டாளர்” வெளியிடப்பட்ட “வடகிழக்கு மனித உரிமைகள் செயலக” தமிழினப் படுகொலைகள் தொடர்பான குறிப்புகளை பகுதி பகுதியாக இணைக்க இருக்கிறோம்.
படுகொலை தலைப்பின் மேல் சொடுக்கி pdf கோப்புகளை பார்வையிட முடியும்
அ. தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை 10 ஜனவரி 1974 (தமிழ் மக்கள் தமது மொழி, பண்பாடு என்பவற்றை உள்ளடக்கி நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடத்த ஏற்பாடு செய்து நடாத்திக் கொண்டிருந்த போது சிங்கள காடையர்களால் மேற்கொள்ளப்பட்ட படுகொலை)
ஆ. 1977 ஆம் ஆண்டு இனப்படுகொலை ( யாழ் பல்கலைக்கழகத்தில் கல்விகற்ற சிங்கள மாணவர்களால் பரப்பப்பட்ட வதந்திகளின் அடிப்படையில் கட்டவிழ்த்துவிடப்பட்ட படுகொலை)
இ. 1981 ஆம் ஆண்டு இனப்படுகொலை (யாழ்ப்பாணம் நாச்சிமார்கோவில் மற்றும் அண்டிய பகுதிகளில் சிங்கள காவல்துறை மற்றும் தென்னிலங்கையில் இருந்து கொண்டுவரப்பட்ட காடையர்களால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள்)
தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் மூன்று படுகொலை ஆவணக் குறிப்புகள் வாசிப்பிற்காக இணைக்கப்படும்.
காகம்
5,105 total views, 3 views today
Leave a Reply
You must be logged in to post a comment.