எம்மைப்பற்றி

       “காகம்என்பது சூழலை தூய்மையாக வைத்திருப்பதும், தன் இனத்தை ஒன்று சேர்த்து மகிழ்வதும், புத்திசாலியான பறவை என்றும் பெயர் பெற்ற ஒரு பறவை. இதே போலத் தான் இந்த காகமும் செயற்பட இருக்கிறது.

       2009 ற்குப் பின்னர் ஈழத் தமிழ்த் தேசியத்தில் புரையோடியிருக்கும் கட்டுப்பாடற்ற, கட்டமைப்பற்ற செயற்பாடுகளுக்குக் காரணம், மக்களின் தெளிவின்மை என்றுதான் காகம் நம்புகிறது.

       இன்று ஈழத் தமிழ்த் தேசிய அரசியல் மற்றும் நிர்வாக செயற்பாட்டு வெளியானது; ஒரு கட்டுப்பாடற்ற, முதிர்ச்சியற்ற, ஆழ்ந்த தெளிவற்ற சிந்தனைகளோடு சிதைவடைந்து காணப்படுகிறது. இப்படியான நிலையில், ஈழத் தமிழ்த் தேசிய விடுதலைக்கான அரசியலை முன்னெடுப்பது என்பது சாத்தியமற்ற ஒன்று. எனவே அதை சீரமைக்க வேண்டிய தேவை என்பது காலத்தின் கட்டாயம். இந்த கட்டாயக் கடமையைகாகம்செய்யும்.

    ஈழத் தமிழித் தேசியத்தின் அரசியல், அறிவியல், பொருளாதாரம், கலை, இலக்கியம் உள்ளிட்ட அலகுகளை ஆழமான முறையில் எமது மக்களுக்கு விளங்கப்படுத்தி, அதனூடாக பொது எதிரியை நோக்கி மக்களை சரியான முறையில் கட்டமைப்பதே எமது நோக்கம்.

ஒன்றாகச் சேருவோம் ஒன்றிற்காகச் சேருவோம்!

 5,975 total views,  3 views today

(Visited 11 times, 1 visits today)

Be the first to comment

Leave a Reply