தமிழரின் தொன்மை – முனைவர் ஜெ.அரங்கராஜ்-               

தமிழர்கள்  தமிழ்நாட்டையும் இலங்கையையும் தாயகமாகக்கொண்டு வாழ்ந்து வருபவர்கள். இவர்களுடைய தொன்மையான தாயகம் எது? என்பது குறித்து ஆய்வாளர்களிடையே பல்வேறுபட்ட ஐயப்பாடுகள் நிலவி வருகின்றன. பல்வேறுபட்ட கருதுகோள்கள் தமிழரது தொன்மை குறித்து நிலவிவருகின்றன. பொதுவாக 3 வகையான கோட்பாடுகள் தமிழர்களின் தாயகம்குறித்து ஆய்வாளர்களிடையே நிலவி வருகின்றது.

முதலாவதாக மத்தியதரைக்கடல் பகுதியினைத் தாயகமாகக்கொண்டு தமிழர்கள் மெல்ல மெல்லோ சிந்துசமவெளியினூடாக தமிழகம் போந்று பிறகு இலங்கையிலும் பரவினார்கள் என்னும் கருதுகோள் இருந்து வருகின்றது. இதற்காக மத்தியதரைக்கடல் நாடுகளிலும் மத்திய ஆசியாவிலேலும் பேசப்படக்கூடிய மொழிகளில் காணப்படக்கூடிய தமிழ்ச்சொற்களையும் சிந்துசமவெளியில் காணக்கூடிய தொல்லியல் சான்றுகள் தமிழ்நாகரீகத்தின் எச்சங்கள் முதலானவையைக்கொண்டு இந்தக்கோட்பாடு சரியானது என பல ஆய்வாளர்கள் வலியுறுத்தினார்கள். சுவாமிஞானப்பிரகாசர், யாழ்பாடியார் முதலானவர்கள் இந்தக்கோட்பாட்டினை பெரிதும் வலியுறுத்தினார்கள். ஆனால் பல்வேறு சான்றுகளின் அடிப்படையிலும் பல்வேறு கருத்தியல் அடிப்படையிலும் இந்தக்கோட்பாட்டின் மெய்ப்புத்தன்மை என்பது கேள்விக்குறியாக்கப்பட்டு இக்கோட்பாடு ஆய்வாளர்களினால் பின்பு ஏற்றுக்கொள்ளப்பட வில்லை.

அதேசமயத்தில் தமிழர்கள் ஆபிரிக்காவிலிருந்து வந்தார்கள் என்பதான ஒருகோட்பாடும் உண்டு. ஆபிரிக்கநாடுகளுக்கும் தமிழர்களுக்குமிடையிலான ஒற்றுமைகள் ஆபிரிக்கப்பண்பாட்டுக்கும் தமிழ்ப்பண்பாட்டுக்கும் இடையேயான ஒற்றுமைகள் முதலானவற்றைக்கொண்டு இவ்வாறு கருதுவார்கள். மற்றும் சிலர் தென்னமெரிக்காவில் இன்கா, அயன் முதலான நாகரீகத்தின் தொடர்புகளைக்கொண்டு தமிழர்கள் அப்பகுதியிலிருந்து இங்கு போனர்கள் என்றும் மத்திய ஆசியாவிலிருந்து சிலர் தென்னமெரிக்கநாடுகளுக்கும், சிலர் தென்னிந்தியாவுக்கும் வந்தார்கள் என்றும் கருதுகோளைக்கொண்டுள்ளார்கள். ஆனால் இன்றையநிலையில் இவ் ஆய்வுக்கருதுகோள்கள் எல்லாம் ஆய்வாளர்களால் புறந்தள்ளப்பட்டு விட்டன. ஏனேனில், அதற்கான முழுமையான சான்றாதாரங்கள் இன்னும் கிடைத்தபாடில்லை.

அதேசமயத்தில் தமிழகத்திற்குத் தெற்கே குமரிகோடு என்று ஒருகண்டம் இருந்ததென்றும் அக்கண்டத்தின் பெரும் நிலப்பரப்பில் 47 நாடுகள் இருந்ததென்றும் அந்த நாடே தமிழர்களின் பூர்வதாயகம் என்றும் அந்தநாடு இன்றைய இலங்கையையும் தமிழகத்தையும் உள்ளடக்கி தெற்கே அவுஸ்ரேலியா மேற்கே ஆபிரிக்ககிழக்குக்கரையையும் சுமத்திராதீவுகளைத் தொட்டுக்கொண்டு இருந்தது என்று ஆய்வாளர்கள் கருதுகின்றார்கள். 47 நாடுகள் குமரிக்கண்டம் என்று அழைக்கப்பட்டதென்றும் பிறகு அது கடல்கோளால்கொள்ளப்பட்டபடியால் தமிழர்கள் தமிழகத்திலும் இலங்கையிலும் கரையேறினார்கள் என்றும் ஒரு கருதுகோள் உண்டு. பல்வேறு சான்றுகளின் அடிப்படையில் இந்தக்கருதுகோளினை ஏற்புடையதாகக்கைக்கொள்கிறார்கள். இக்கருதுகோளுக்கு அகச்சான்றுகளும் புறச்சான்றுகளும் உண்டு.

1867ம்ஆண்டுகெகேஸ், பிலிப் என்னும் இருஆய்வாளர்கள் முதன் முதலாக இந்த லேமூரியா கோட்பாட்டினை வெளியிட்டார்கள். பிறகு சென்னையிலுள்ள தியானசபையில் மேடம்பிறாஸ்டி மற்றும் மெட்டி ஆகியோர் இந்த லேமூரியா பற்றிய ஆய்வுகளை முன்வைத்தார்கள். அவர்களுக்குப் பிறகு 1898ல் J.M.நல்லசாமிப்பிள்ளை என்பவர் The light of truth என்னும் ஆங்கில நூலில் குமரிக்கண்டம் பற்றியும் குமரிக்கண்டத்தில் தமிழர்களில் வாழ்வியல் பற்றியும் தமது ஆய்வுகளை வெளியிட்டார். 1916ஆம் ஆண்டு A.B சுப்பிரமணியசாஸ்திரி அவர்கள் லெமூரியா குறித்த வரைபடம் ஒன்றினை உருவாக்கினார். A.B. சுப்பிரமணியசாஸ்திரி அவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 1926ஆம் ஆண்டு மறையடிகளாரைத் தலைவராகக்கொண்ட தனித்தமிழ் இயக்கம் குமரிக்கண்டம் என்னும் கோட்பாட்டினை ஆய்வுநிலையில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு முன்வைத்தது. அதற்குப்பிறகே. அப்பாதுரையார் அவர்கள் குமரிக்கண்டம் அல்லது’ கடல்கொண்ட தென்நாடு’ என்னும் நூலினைவடிவமைத்தார்.

இவ்வாறாக குமரிக்கண்டம் குறித்து பல்வகைப்பட்ட ஆய்வுகள் வெளிவந்துள்ளன. இந்த ஆய்வுகளுக்கான அகச்சான்றுகளை இனிக்காண்போம். நம்முடைய தமிழ்மொழியின் முதலாவது இலக்கணநூலும் கடைச்சங்க இலக்கண நூலுமாகக் கருதப்படுவது தொல்காப்பியம்.. இந்தத்தொல்காப்பியத்திற்கு பழம்பாணனார் என்போர் சிறப்புப்பாயிரம் எழுதினார்.  அந்தச் சிறப்புப்பாயிரமாவது என்னவெனில்

“வடவேங்கடம் தென்குமரி ஆயிடத்தமிழ்கூறு நல்லுலகத்து” என்றும் அடியால் தொடங்குகிறது.” வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத்தமிழ் கூறுநல்லுலகத்து வழக்கும் செய்யுளும் ஆயிடும் முதலின் எழுத்தும் சொல்லும் பொருளும்நாடே” என்னும் அந்தவாழ்த்துப்பா எனப்படும் சிறப்புப்பாயிரத்தினால் தமிழகத்தின் எல்லை வடக்கே வேங்கடமலை என்றும் தெற்கே குமரிஆறு என்றும் குறிப்பிடப்படுகின்றது. தென்குமரி என்பது இளவரசியைக் குறிப்பது இல்லாமல் பண்டையகுமரி ஆற்றைக் குறிப்பதாக அமைகின்றது. இந்தச்சிறப்புப்பாயிரத்திற்கு மறைசெய்த அடியார்க்கு நல்லார் கூறுவதினைக்காணலாம்.

மங்கள திசையாலில் வடக்கு என்று முன்கூறப்பட்டது. கடல்கொள்வதன் முன்பு பிறநாடும் உள்ளமையால் தெற்கும் எல்லை கூறப்பட்டது என்பதினால் பெரும்நிலப்பகுதி கடலால்கொள்ளப்பட்டது என்பதினை அறியலாம். கிழக்கும் மேற்கும் பிறநாடு இன்மையின் எல்லைகூறப்படாதது ஆயின. இறந்தநிலைக்கோறாரி மலையும் ஆறும் கூறியது அவைதிருத்தமானதா எழும்பொருனாரின் உரை. உரைசெய்த நச்சிநார்க்கு இனியாரும் குமரிக்கண்டத்திற்குத் தெற்கு 49 நாடுகடல்கொண்டனவாதலின் கிழக்கும் மேற்கும் கடல்எல்லையாக முடிதலின் எல்லைக்கோடாக அமைத்தனர் என்று கூறுவர். இதன் வழிதெற்கே 47 நாடுகள் இருந்தமையினை அறியலாம். குமரிக்கோடு என்னும் பெருநிலப்பகுதி இருந்ததினையும் குமரிக்கோடு என்னும் மலைபகுதி கடலால் மூழ்கியதனையும் அறியலாம். அது மாத்திரமல்லாமல்

“வடஆறுபணிபடுநெடுவரைவடக்கும்

தெரஆறுகுமரியும்தெற்கும்

முனஆறுகரைப்பெறுதொடுகடல்குணக்கும்

குடஆறுதொன்றுமுதின்பப்பத்தின்குடக்கும்”

என்னும் புறப்பாடலில் வடக்கே இருக்கக்கூடிய இமயமலையும் தெற்கே குமரியாறும் கூறப்படுகின்றது. இதிலே இவருக்கு இருக்கக்கூடிய பழைய உரையில் வடக்கின் பணிவரகன்னியாற்றின் தெற்கும் என்றும் கூறப்படுகின்றது. கிழக்கே இருக்கக்கூடிய கிழக்கும் மேற்கும் கடலாகவும் இமயமலையாகவும் தெற்கேகன்னியாறாகவும் இருக்கக்கூடிய ஒரு துணைக்கண்டப்பகுதி கூறப்படுவதினைக் காணலாம். இப்பாடல் பல்யாகசாலைகாரைக்கிளார் பாடியதாக அமைகின்றது. அதுமாத்திரமல்லாமல் கலித்தொகைப்பாடலினால் கடலால் மூழ்கிப்போனதினை அறியமுடிகின்றது.

இதே புறநானுற்றிலே தென்குமரிபடப் பெருக்கல் வடகுமரி குட கடலால் எல்லை என்னும் பாடலுக்கான பழைய உரையிலே தென்திசைக்கண்கன்னியும் வடதிசைக்கண் இமயமும் என முறை கூறப்படுகின்றது. இதன் அடிப்படையில் தென்திசையில் இருப்பது கன்னி என்னும் ஆறாகும். இது பண்டைய குமரிக்கோட்டிலே ஓடிய ஆறாகக் கருதப்படுகின்றது. இவ்வாறாக தமிழ்நாட்டின் எல்லையை பண்டைய தமிழகத்தின் எல்லையாகக் குறிக்கின்ற பொழுது தெற்கே நதியினையும் வடக்கே மலையினையும் குறிப்பதை வழமையாகக்கொண்டிருந்தார்கள். அதுமாத்திரமல்லாமல் திருவள்ளுவர் தன்னுடைய திருக்குறளிலே தென்புலத்தார் என்னும்சொல்லைப்பாவிப்பார். தென்புலத்தார் என்பவர்கள் தமிழர்களுடைய மூதாதையர்களாகக் கருதப்படுவார்கள். புறநானூற்றுப் பாடலிலும்

“ஆழியர்பார்ப்படமாகவும் தென்தீரும் தினியுடையோரும் தேனித்தென்புலவாயின ர்அருங்கடல் இருக்கும் பொன்போல் புதல்வரைப்பெறாயீரும்”

என வரும். இதனடிப்படையில் தென்புலத்தார் என்போர் கொடும் கடல்கோளினால் மூழ்கிப்போன தங்களுடைய மூதாதையரின் நினைவாகவே தமிழர்கள் கொண்டார்கள் எனலாம். இதன்படி தென்திசை என்பது எமதிசை என்றாயிற்று. உயிர் அச்சத்தின் காரணமாகவே தமிழர்கள் தென்திசையை எமதிசை எனக் கொண்டார்கள் எனலாம். தென்திசை மாத்திரமல்லாமல் மந்தாரமலை என்னும் ஏறுமலை தெற்கே உள்ளதாக சைவசித்தாந்தநூல்கள் கூறுகின்றன. மந்தாரமலையிலேயே சிவபெருமான் உள்ளதாக அவை கூறுகின்றன. இந்தகடல்கோள் குறித்து பல்வகையான செய்திகள் காணப்படினும் சிலப்பதிகாரத்திலே பல அரிய தகவல்கள் காணப்படுகின்றன.

“பஃறுளியாற்றுடன்பன்மலையடுக்கத்துகுமரிக்கோடும்கொடுங்கடல்கொள்ளவடதிசைகங்கையும்இமயமும்கொண்டுதென்திசைஆண்டதென்னவன்வாழி”

என சிலப்பதிகாரத்தில் கூறப்படுகின்றது. இது பாண்டிய மன்னனை வாழ்த்தி மாடலவரையோன் என்னும் வடபுலத்து அந்தணன் பாடியதாக பாடல் வரிகள் அமைகின்றது. அப்போது ஒரு வாழ்த்துப் பாடலிலே பஃறுளியாற்றும் பன்மலை அடுக்கமும் குமரிக்கோடும் கடலால் மூழ்கி குமரிக்கண்டமும் மூழ்கிப்போய், பிறகு தென்திசையில் இருக்கக்கூடிய மதுரையில் இருந்து இந்தத்தமிழகத்தை ஆண்டான் என்பதினை இந்தப்பாடலால் காட்டப்படுகின்றது. இமயத்தையும் கங்கையையும் இந்தநாடு முழுவதையும் ஆண்டான் என்பதினை அறியமுடிகின்றது. இதன்படி குமரிக்கண்டம் மூழ்கிப்போன செய்தியினை தெளிவான பதிவாக சிலப்பதிகாரம் காட்டுகின்றது.

இதே சிலப்பதிகாரத்தில் மற்றுமொரு அடி தமிழர்களின் எல்லைகளைக் குறிக்கும்போது “நெடியோன் கொற்றமும் தொடியோள் வௌவமும் தமிழ்வரம் தன்புலன்நன்நாட்டு” என்று சிலப்பதிகாரத்தின் தேனீர்க்கதையில் முதலிரு அடிகள் குறிப்பிடுகின்றன. நெடியோன் கொற்றம் என்பது வேங்கடமலையையும் தொடியோள் வௌவம் என்பது குமரி ஆறையும் குறிப்பதாயிற்று. இதற்கு முறைசெய்த அடியார்க்கு நல்லார்நெடியோன் கொற்றம். வேங்கடமலை, தொடியோள் பெண்பால் பெயரால் குமரிஎன்பதாயிற்று. ஆகவே பெண்பால் கண்ணதோ ஆற்றுக்கு பெயராம். ஆதலால் நெடியோன் கொற்றமும் தொடியோள்நதியும் என்றல்லாது வௌவம் என்றது.

எதுமையின் முதல்நூலில் இறுதிக்கண் தென்மதுரையகத்து அகத்தியனாய் இருந்த சங்கங்கள் மூழ்கிய செய்தியினை குறிப்பிடுகின்றார். இவ்வாறு இந்தப்பாடலுக்கு உரைசெய்த அடியார்க்குநல்லார் தமது உரையிலே மூழ்கிப்போன தமிழ்நாடுகள் யாவை என்பதனையும் பட்டியலிடுகின்றார். அவைவருமாறு: அக்காலத்தில் அவர்நாட்டு தென்பால் துறைமுகத்திற்கு வடஎல்லையாக பஃறுளி என்னும் ஆற்றுக்கும் குமரி என்னும் ஆற்றுக்குமிடையே 700 காதம் தூரம் இருந்தது என்றும் அதிலே ஏள்தென்கநாடு, ஏள்மதுரைநாடு, ஏள்முன்பாலைநாடும், ஏள்பின்பாலைநாடும், ஏள்கொன்றநாடும், ஏள்குளக்கரைநாடும், ஏள்குறும்படைநாடும், குமரியும், கொள்ளமும், பன்மலைநாடுகளுமாக 49 நாடுகள் இருந்ததாக அடியார்க்குநல்லார் சுட்டுவார். இந்த ஏளகம் இந்த மாதிரியான ஏழுநாடுகளுக்குமாக ஏளகம் எனப்படும் தெங்குநிறைந்த ஏளகங்கள் பல குமரிக்க ண்டத்திலே இருந்தன. சிங்களம் என மாறிற்று எனக்கருதுவோரும் உள்ளார்.

இது போலவே அடியார்க்கு நல்லார் பல்வேறு வகையான செய்திகளும் பல்வேறு வகையான அகச்சான்றுகளும் தமிழகத்திற்குத் தெற்கே இலங்கையில் தமிழகத்தோடு சேர்ந்து உள்ளடக்கிய ஒருபெருநிலப்பரப்பு இருந்தது என்பதினை அறிவதற்கு உதவியாக அமைகின்றன. சிலந்திய நூலிலே கூட குமரிபின்புலத் தமிழகத்திற்கு வடக்கே தமிழகத்தின் எல்லை குமரி ஆற்றைப் பற்றிக் குறிப்பிடுகின்றது. இதன்படி தெற்கே ஒருகண்டம் இருந்தது என்பதினைத் தெளிவாக அறிய முடியும். இதுமட்டுமல்லாமல் வேறு சிலசான்றுகளின் வழியும் தென்பகுதியிலிருந்த மிகப்பெரிய கண்டம் மூழ்கிவிட்டது என்பதனை அறியலாம். எடுத்துக்காட்டாக புறநானூறில் புறப்பால்வெண்பாப்மாலையில் வரக்கூடிய ஒருபாடலான

“பொய்யகலநாளும்புகைவிளத்தல்என்வியப்பாம்வையகம்போற்றவயங்கொளிநீர்கையகலகல்தோன்றாமண்தோன்றாக்காலத்தில்முன்தோன்றியமூத்தகுடி”

இதில் வையகம் போன்று இருக்கக்கூடிய வயங்கொளிநீர்கையகன்று நலப்பகுதி தோன்றியதினை அறியமுடிகின்றது. இதன்படி நிலப்பகுதி மூழ்குதலும் தோன்றுதலும் தமிழ் இலக்கியத்தில் தெளிவான பதிவைக் கொண்டுள்ளன. அதே போலவே இந்துபுராணங்களிலே மனிதனின் வரலாற்றில் கடல்கள் தோன்றுதலும் மூழ்குதலும் சொல்லப்பட்டுள்ளது. இதே கதைகள் கிறீஸ்தவத்திலும் இஸ்லாத்திலும் காணக்கிடக்கும். மேலும் இராமாயணத்திலே வால்மீகி இராமாயணத்திலே அனுமன் இராமனிடத்திலே எங்கெங்கு சென்று தேட வேண்டும் என்று சொல்லும்போது அநுமனுக்கு வழிகாட்டும் இராமன் கபாலபுரத்தைப் பற்றிக் குறிப்பிடுகின்றான். கபாலபுரம் பாண்டியர்களின் தலைநகரமான இருந்த காலமாக அது இருக்கலாம். கபாலபுரத்தின் அழகிய கதவு வேலைப்பாடுகள் பற்றி இராமனுடைய பயணப் பாதையிலே குறிப்புகள் காணப்படுகின்றன.

ரகுவம்சத்திலும் கபாலபுரம் பற்றிய செய்திகள் காணப்படுகின்றன. இராவணனின் மாளிகை இன்றைய திருகோணமலைக்குக் கிழக்கே சிலமைல் தூரத்தில் இருந்தது என்பதினை அறியமுடிகின்றது. அதுபோலவே இலங்கையின் தென்பகுதியிலே உள்ள மாவட்டம் மாத்தறை என்பதாகும். மாத்தறை என்றால் அதுபெரிய தரை என்பது பொருத்தம். ஆனால் மாத்தறை கடல்தான் உள்ளது. அப்படியான நிலப்பரப்பு இருந்து மூழ்கி இருக்கலாம் என்று கருதவாய்ப்புண்டு. இதுபோலவே பாண்டிய மன்னன் உக்கிரத் திருவடிகள் மிகப்பெரியவர்க்கடம் பஞ்சம் வந்த போது உழவர்கள் அனைவரும் பிரிந்து சென்று மீண்டும் ஒன்றுகூடிய நிகழ்வுகளைக் காணமுடிகின்றது. இதுபோலவே முதலிருசங்கங்கள். முதல்சங்கம் கடல்கொண்ட தென்மதுரையிலும் இரண்டாம்சங்கம் கடல்கொண்ட கபாடபுரத்திலேயும் இருந்து மூன்றாம் சங்கம் மதுரையிலும் அமைக்கப்பட்டதற்கான பல்வேறு சான்றுகள் இறையனார் கலவை உரையிலே காணப்படுகின்றது. இந்தக்கலவை உரையிலே காணப்படக்ககூடிய பலசெய்திகளில் சில மிகைப்படுத்தப்பட்டவையாக இருந்தாலும் இருமுறையான கடல்கோள்களினால் தமிழ்நிலப்பகுதி மூழ்கிப்போய்விட்டன  என்பதற்கான தெளிவான சான்றுகள் கிடைக்கின்றன.

பாண்டிய மன்னர்களைப் பற்றிப் பார்க்கின்ற போது “ஆழியணிகளம்பன்”என்ற பாண்டியன் என்றசொல்லும். ஆழி என்றால் கடல். தன்னுடைய அணிகலன்களை அளம்பன் என்ற பாண்டியன். “இழந்ததருதிருவைப்பண்டியன்”நிலத்தைமீட்டுத் தந்த பாண்டியன் கடலிடமிருந்து நிலத்தைமீட்டுத்தந்ததிருவைப்பாண்டியன் என்ற சொற்களும் கடல்கோள்களுக்கும் பாண்டிய மன்னர்களுக்குமான தொடர்புகளை விளக்குவனவாக அமைகின்றன. இதனடிப்படையில் பல்வேறு கடல்கோள்கள் தொடர்ச்சியாக நிகழப்பெற்று தமிழர்களின் நிலப்பகுதி மூழ்கிவிட்டது என அறியமுடிகின்றது.

இதற்கான இன்னொரு புறச்சான்றாக அவுஸ்ரெலிய பழங்குடிமக்களின் மொழியிலே காணப்படக்கூடிய தமிழ்ச்சொற்களும் ஆபிரிக்க மடகஸ்கார் மொழிகளிலே காணப்படக்கூடிய தமிழ்ச்சொற்களும் மிகப்பழந்தமிழ்ச் சொற்களாக இருப்பதால் தமிழர்களுக்கும் இந்தமக்களுக்குமான தொடர்புகள் எவ்வாறு ஏற்பட்டது என்பது மிகவும் ஆய்வுக்குரியதாகும். மேலும் “பூமராங்”என்று சொல்லக்கூடிய வீசிவிட்டால் எதிரியைத் தாக்கிவிட்டுத் திரும்பிக்கைக்கு வரும் கருவியைப் போன்றே பண்டைய தமிழ் இலக்கியங்களில் விசிறி என்னும் கருவி காணப்படுகின்றது. இது குறித்து பேராசிரியர்.பா.அருளி பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். அது மட்டுமல்லாமல் பல்வேறு வகையான பண்பாட்டுக் கூறுகள் அவுஸ்ரேலியப் பழங்குடிகளுக்கும் தமிழர்களுக்கும் ஒன்றாகக் காணப்படுவதனை அறியமுடிகின்றது.

இது போன்ற கூறுபாடுகளை வைத்துப் பார்க்கும்போது”லெமோ” எனப்படும் குளம்பு வகைகள் அவுஸ்ரேலியாவில் காணப்படுகின்றது. அதேவகையான குளம்புவகைகள் நீலகிரிமலையிலும் காணப்படுகின்றன. இதுபோன்றான உயிரினத் தொடர்புகளை வைத்துப் பார்க்கின்ற போதும் அவுஸ்ரேலியாவினைத் தழுவிய கண்டம் இருந்தது என்பதனை எண்ணுவதற்கான பல்வேறு வாய்ப்புக்கள் எழுகின்றன. இவற்றையெல்லாம் அடிப்படையாக வைத்துப் பார்க்கின்றபோது குமரிக்கண்டம்தான் தமிழர்களின் தாயகம் என்றும் பிறகு அது கடலால்கொள்ளப்பட்ட போது தமிழர்கள் இலங்கைத்தீவினிற்குள்ளும் இந்துசமுத்திரத்தில் காணப்படக்கூடிய பல்வேறு வகையான தீவுகளிலேயும் தமிழகத்திலும் போன்று தங்களின் நாகரீகம் பண்பாட்டினை பேணிவந்தார்கள் என்று அறியமுடிகின்றது.

இதனுடைய எச்சங்களாக பல்வேறுபட்ட பண்பாட்டுக் கூறுகளை இன்றும் தமிழகத்திலும் இலங்கையிலும் காணமுடியும். வெற்றிலை கொடுக்கக்கூடிய பண்பாட்டு மரபானது இன்றும் தமிழர்களிடம் காணப்படுகின்றது. வெற்றிலை கொடுக்கக்கூடிய பண்பாட்டுமரபு என்பது உடையையும் உடைமைகளையும் இழந்துவிட்டு கரையேறிய தமிழர்களுக்குத் தங்களுடைய உடையாக இலைதளைகள் முதலிலே உடையாகக் கொடுக்கப்பட்டிக்கலாம். பின்பு அந்தவழக்கம் தொடர்ச்சியாக வெற்றிலை கொடுப்பதாக மாறியிருக்கலாம் என்று மானிடவியல் அடிப்படையில் எண்ணவும் வாய்ப்புண்டு. அதுமட்டுமல்லாமல் தொன்மவியல் அடிப்படையிலும் ஒர் நிலப்பகுதியிலிருந்து தமிழர்கள் இந்நிலப் பகுதிக்கு வந்தார்கள் என்று சொல்வதற்கான பல்வேறு சான்றுகள் உண்டு.

அதேபோலவே புறநானூற்றிலே பாண்டிய மன்னனை வாழ்த்தும் பொழுது, “பஃறுளிமலையிலும்பலநாள்வாழ்க்கை” என்று வாழ்த்துவதால் பஃறுளி ஆற்றுப் பற்றிய செய்தியையும் நாம் அறியமுடியும். ஆனால்  இந்தப் பகுதிகளில் இதுவரை முழுமையான கடல்கோள்கள் எதுவும் நிகழ்ந்ததில்லை. இதனையாரும் ஆய்வு செய்யவில்லை. நீர் அகழ்வாய்வுப் பணிகள் இந்தப் பகுதியிலே முழுமையாக நடைபெறவில்லை. அதற்கான ஊக்கமும் காணவில்லை. இப்படிக் கரையேறிய தமிழர்கள் தமிழகத்திலிருந்து மெல்ல மெல்ல இந்தியத்துணைக்கண்டம் முழுவதும் பரந்து வடபுலத்திலே சிந்துவெளியிலே ஒருமிகப்பெரிய நாகரீகத்தினைக் கட்டமைத்தார்கள் என்பதற்கான வலுவான சான்றுகள் பல உள்ளன. அவ்வாறான சான்றுகள் ஐந்தினையும் வைத்துப் பார்க்கின்ற போது தமிழர்களின் தொடக்ககால வரலாறு என்பது குமரிக்கண்டத்திலிருந்து தொடங்குகிறது என்பதை அறியமுடியும். அவ்வாறான ஒரு குமரிக்கண்டத்தின் ஒருபகுதியாக இலங்கையினைக் கருதவாய்ப்புள்ளது. இது தமிழ்இலக்கியங்களின் வழியிலும் மானிடவியல் தொல்லியல் வழியிலும் நமக்கு மெய்ப்பிப்பதாக அமையும்.

அண்மையிலே இலங்கையிலே நான்கு, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இலங்கைத் தொல்லியல் திணைக்களத்தால் இலங்கைக்குத் தெற்கே ஒருபெரும் மூழ்கிய நிலப்பகுதி கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அது இணையதளங்களிலும் வெளியானது. அந்த நிலப்பகுதி “செக்கன்லானட்” என்று அழைக்கப்படும். அந்த நிலப்பகுதிக்கு இலங்கை அரசாங்கம், இலங்கைத் தொல்லியல் திணைக்களம் “அட்லாண்டா” எனப்பெயரிட்டது. ஆனால் அட்லான்டிக் கடலுக்கும் இதற்கும் எந்தவிதமான தொடர்பும் கிடையாது. அதேநிலையில் தீபவம்சத்தில் இருந்தும் மகாவம்சத்தில் இருந்தும் பலசான்றுகளை எடுத்துக்காட்டி இவை சிங்களவர்களுடைய பூர்வீகநிலமாகச் சித்தரிக்கப்பட்டது. ஆனால் இதற்கான எந்தவிதமான அடிப்படைத் தரவுகளும் இல்லை.

இதோடு நின்றிருந்தால் பரவாயில்லை. தமிழ் இலக்கியமான சிலப்பதிகாரத்திலும், மணிமேகலையிலும் மற்றும் புறநானூற்றிலும் சொல்லப்பட்ட கடல்கோள் தொடர்பான செய்திகளும் தமிழர்களின் மூழ்கியநிலம் தொடர்பான செய்திகளும் பொய் எனச்சுட்டிக்காட்டப்பட்டிருப்பது வேடிக்கையளிப்பதாக இருக்கின்றது. ஏனெனில் இந்த இலக்கியங்களின் தோற்றத்திற்குப்பின்பே கி.பி. 5ம்நூற்றாண்டிலேதான் தீபவம்சம் முதலான சிங்கள இலக்கியங்கள் பாளிமொழியிலே தோன்றின. அவ்வாறிருக்க தமிழ் இலக்கியங்களில் சுட்டப்படுவது பொய் எனச்சுட்டுவது எவ்வகையில் பொருந்தும். அதுபோலவே சிங்கள மக்களின் வருகை போன்று பல்வேறு தகவல்களும் திரித்துக்கூறப்படுவதாக அமைகின்றன.

ஆனால் தமிழ் மக்களின் வருகை தொடர்பான தகவல்கள் தெளிவாகவும் ஆணித்தரமாகவும் தமிழ் இலக்கியங்களில் இதுதான் தமிழர்களின் தாயகம் என்றும் இதுதான் குமரிக்கோட்டின் ஒருபகுதி என்றும் உள்ளன. இது பற்றியான பல்வேறுபட்ட தரவுகளின் ஆய்விகளின் அடிப்படையில் தமிழர்களின் தாயகம் குமரிக்கோடு என்பதும் அந்தக்குமரிகோட்டின் எஞ்சியபகுதிகள்தான் இலங்கையும் தமிழகமும் என்பதும் எமக்கு நிரூபணமாகும்.

ஆய்வறிஞர் முனைவர் ஜெ.அரங்கராஜ்,

யாழ்ப்பாணம்.

 6,416 total views,  2 views today