பகுதி 5: கடற்கரையோரம் மற்றும் சமூக அபிவிருத்தி (Waterfront and Community Development)

1.அறிமுகம் :  எதிர்காலத்தில் யாழ் நகரம்  எவ்வாறு இருக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றீர்கள்? நகராக்க சிந்தனையில் ஒரு பார்வை

2. பகுதி – 1 :  அறிவழிகளும் முன்மொழிவுகளும் – பகுதி 1 – சுஜா

3. பகுதி – 2அறிவழிகளும் முன்மொழிவுகளும் – பகுதி 2 – சுஜா

4. பகுதி – 3 : அறிவழிகளும் முன்மொழிவுகளும் – பகுதி 3 – சுஜா

5. பகுதி – 4 : யாழ் நகரில் மரபுரிமை சார்ந்த பிரதேசங்கள்

_________________________________________________________________________

கடற்கரையோரம் மற்றும் சமூக அபிவிருத்தி

(Waterfront and Community Development)

 1. அறிமுகம்
 2. இனங்காணப்பட்ட பிரச்சினைகள்
 3. தீர்வுகள்

 

1. அறிமுகம்

யாழ் நகரமானது தெற்கு புறமாக இயற்கை அழகும் பொருண்மிய முதன்மையும் வாய்ந்த ஏறத்தாழ 10 கிலோமீற்றர் நீளமான கடற்கரையோர எல்லையினையும் அதற்கு எதிர்ப்புறமாக ஆங்காங்கே அழகான சிறு சிறு தீவுக்கூட்டங்களினையும் கொண்ட அழகான நகரமாகும்.

இதில் தெற்குப் புறமாக அமைந்துள்ள ஏறத்தாழ 5 சதுர கிலோமீற்றர் கொண்ட நிலப்பரப்பானது இக்கடற்கரையோரத்தினை அண்டி அதனுடன் நெருங்கிய தொடர்பு கொண்டதாகக் காணப்படுகின்றது. யாழ் நகரத்தின் குடித்தொகைப் பரம்பல் மற்றும் அடர்த்தி அடிப்படையில் இப்பகுதியானது அதிக மக்கள்தொகை  கொண்ட பிரதேசமாகும். 2017 ஆம் ஆண்டு குடித்தொகைக் கணக்கெடுப்பின் படி,  யாழ் நகரத்தின் மொத்த குடித்தொகையில் அண்ணளவாக 20 வீதமான குடித்தொகையினை இப்பிரதேசம் கொண்டுள்ளது.

காலரீதியாகவும் பிரதேசரீதியாகவும் இப்பிரதேசத்தின் வளர்ச்சி அல்லது உருமாற்றம் பற்றி சிந்திப்போமானால், 10 கி.மீ நீளமான இக்கடற்கரையோர பகுதியானது பொதுவாக பௌதீகரீதியாக ஒரே அமைப்பினைக் கொண்டு இருப்பினும் சமூக அமைப்பு மற்றும் பொருண்மிய காரணிகளின் அடிப்படையில் வேறுபட்ட பின்னணியினையே கொண்டுள்ளது. எனினும்  வரலாற்றுரீதியாக இப்பகுதியானது காலனித்துவத்தின் தாக்கத்திற்குட்பட்ட பகுதியாகவும் 13ஆம் நூற்றாண்டுகளில் தற்போது குருநகர் என அழைக்கப்படும் “குருகுல” என்றழைக்கப்பட்ட இப்பகுதியில் போர்த்துக்கேய தளபதி கொன்ஸ்தாந்தினோபிளும் அவனது படையினரும் இப்பகுதியிலேயே தரையிறங்கினர் என்றும் 1914 களில் இப்பகுதியானது ஆங்கிலேயரினால் சீரமைப்புச் (reclamation) செய்யப்பட்டதைத் தொடர்ந்து 1950களில் பிரேமதாச காலத்தில் வீடமைப்புத் திட்டங்கள் மூலம் பிரதேச வளர்ச்சி கண்டது.

இத்தகைய வரலாற்று பின்னணியுடன் பின்வரும் காரணிகளின் அடிப்படையில்  இப்பிரதேசம் முதன்மை பெறுகின்றது.

 • இயற்கை அழகு
 • பொருண்மிய முதன்மை – கைத்தொழில் (மீன்பிடி மற்றும் சுற்றுலாத்துறை)
 • ஏற்கனவே மீன்பிடித்துறை சார்நத கைத்தொழில்கள் நடைமுறையில் உள்ளன. (Ice factory, பதனிடல்)
 • அதிக மக்கள்தொகை மற்றும் பொருண்மியச் செயலாற்றலுள்ள மக்கள் (Economically active population) அதிகம்
 • சமூகவியல் கண்ணோட்டத்தில் இன்றும் தனக்கே உரித்தான வாழ்வியல்
 • நகர்ப்புற வாழ்க்கை (Urban Life) சிறப்பான முறையில் இயங்கிக் கொண்டு இருக்கின்றது – தெரு வாழ்க்கை (Street life), இரவு வாழ்க்கை (Night life)
 • நகரத்தின் ஏனைய பகுதிகளோடு ஒப்பிடுகையில் அதிகளவிலான பொது இடம் (Public Space) காணப்படுவதுடன் அவை உச்ச அளவில் பிரதேச மக்களால் பயன்படுத்தப்படுதல்
 • பிரதேச வளர்ச்சி காணப்படுகின்றது. அதாவது குறிப்பிட்ட இப்பகுதியானது குடியிருப்பு, வர்த்தக நிலையங்கள், திணைக்களங்கள், பொது இடங்கள் என பெரும்பாலும் அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளது.
 • Fine granulate கொண்ட நிலத்துண்டங்கள் மற்றும் சிறந்த வீதி வலைப்பின்னல் கொண்டுள்ளது.

இத்தகைய சிறப்பியல்புகளைக் கொண்ட இப்பிரதேசமானது இன்று இடம்;, பொருண்மியம் மற்றும் வாழ்வியல் சார் அபிவிருத்திகளில் முற்றிலும்; புறக்கணிக்கப்பட்ட நிலையிலே காணப்படுகின்றது. இப்புறக்கணிப்பின் பின்புலமானது அரச நிறுவனங்களின் தொலைநோக்கற்ற திட்டமிடல் தீர்மானங்களா? வாக்கு வங்கிகளா? அல்லது சமூக ஏற்றத்தாழ்வுகளா என்ற வினாவிற்கு இவற்றின் கூட்டே விடை எனலாம். இக்கூட்டுப்பின்னணியில் இன்று இப்பிரதேசமானது இடம் மற்றும் பொருண்மியம் சார் முதன்மை; இழக்கப்பட்ட நிலையில் பௌதீக மற்றும் சமூக சிக்கல்களின் பிறப்பிடமாக காணப்படுகின்றது.

2. இனங்காணப்பட்ட சிக்கல்கள்

இவற்றின் அடிப்படையில் இங்கு இனங்காணப்பட்டுள்ள சிக்கல்களாக பின்வருவனற்றினைக் குறிப்பிடலாம்.

 • அதிகரித்து வரும் மக்கள்தொகை மற்றும் நிலப்பற்றாக்குறை என்பன குடியிருப்பு மற்றும் வளப்பங்கீட்டில் பாதிப்பை ஏற்படுத்தி வருதல்

 யாழ் நகரத்தின் ஏனைய பாகங்களினை விட இப்பிரதேசமானது இயற்கையான மக்கள்தொகைப் பெருக்கம், தொழில் வாய்ப்புகள் மற்றும் வலுவான குடும்ப அமைப்பு முறை என்பனவற்றால் ஏனைய பகுதிகளினை விட அதிக மக்கள்தொகையைக் கொண்டுள்ளது. அதேநேரம் நிலவளம் மற்றும் வினைத்திறனான நிலவளப்பயன்பாடு; என்பவற்றிற்கு இடையே நிலவும் நேர் எதிர்மறை விகித தொடர்பானது குடியிருப்பு சார்ந்த பின்வரும் சிக்கல்களை ஏற்படுத்தி வருகின்றது.

நகர அபிவிருத்தி அதிகார சபையின் விதிமுறைகளிற்கு முரணாக குடியிருப்புகளை அமைத்தலும் உடல்நலம் பயக்கும் வாழ்க்கைச் சூழல் (healthy living environment) புறக்கணிக்கப்படுதலும்.

இலங்கையில் எந்தவொரு நகரத்திலும் அபிவிருத்தி திட்டத்தினை மேற்கொள்ளும் போது நகர அபிவிருத்தி அதிகார சபையின் சட்டதிட்டங்களிற்கு அமைவாக இருத்தல் வேண்டும். அந்தவகையில் ஒரு நிலத்தில் குடியிருப்பு ஒன்றினை அமைப்பதற்கு ஆகக்குறைந்தது 12 குழிகளாவது இருத்தல் வேண்டும் என்பது விதி. இந்நிலையில் இங்கு தேவையின் அடிப்படையில் நிலத்துண்டுகள் மேன்மேலும்  பிரிகையிடப்பட்டு வருகின்றமையால் உடல்நலம் பயக்கும் வாழ்க்கைச் சூழல் (Healthy Living environment) என்ற விடயம் புறக்கணிக்கப்பட்டு ஒப்புதல் பெற்ற கட்டிடங்கள் தேவை என்ற அடிப்படையில் மட்டும் மேற்கொள்ளும் திட்டமிடலானது ஒப்புதல் பெறுவதற்குத் தேவையானவற்றை மட்டும் நிறைவுசெய்யும், முனைப்போடு அமையும் வகையில் வரைபடங்களும் கட்டுமானங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன.

சிறிய காணித்துண்டுகளும் அடிப்படை வசதிகளற்ற வீடுகளும்

வினைத்திறனற்ற வீடமைப்புத் திட்டம்

ஏலவே குறிப்பிட்டது போன்று காலனித்துவ காலத்திலும் சரி அதற்கு பிற்பட்ட காலத்தில் வந்த அரசாங்களினாலும் சரி இப்பகுதியானது திட்டமிட்ட குடியிருப்பாகவே வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. இதற்கு சான்றாக இதன் வீதி அமைப்பு, நிலசீரமைப்பு (Land Reclamation) மற்றும் வீடமைப்பு திட்டங்கள் என்பன அமைந்திருக்கின்றன. காலப்போக்கில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்கள், சீரற்ற நிர்வாக முறைகள் என்பன காரணமாக இவற்றில் ஏற்பட்ட குழப்பங்கள் காரணமாக முறையான திட்டமிடல்களும் நிருவகிப்புகளும் இல்லாத காரணத்தினால் இவை சீரான முறையில் பேணப்படவில்லை. உண்மையில் நிலபற்றாக்குறையினைக் கருத்திற்கொண்டு குடியிருப்புத் தேவையினை நிறைவுசெய்வதற்கான ஒரேயொரு உத்தியாக இவ்வீடமைப்புத் திட்டம் காணப்படுகின்றது.  எனினும் இவ் ஐந்துமாடி வீடமைப்புத் திட்டமானது வினைத்திறனாக அமைக்கப்படவில்லை மற்றும் இயக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். (பார்க்க இணைப்பு 01-தற்போதைய நிலை)

வினைத்திறனற்ற நிலப்பயன்பாடுபொருத்தமற்ற உட்கட்டுமான வசதிகளும் உட்கட்டுமானங்களின் சுரண்டுதலும்

இப்பிரதேசத்தில் நிலப்பற்றாக்குறையுடன் இணைந்த மிகமுதன்மையான சிக்கலாக இது காணப்படுகின்றது. ஏலவே குறிப்பிட்ட படி அதிகரித்து வரும் மக்கள்தொகையும் நிலப்பற்றாக்குறை, வினைத்திறனற்ற நிலப்பயன்பாட்டுமுறை என்பவற்றினால் ஏற்படும் நிலப்பற்றாக்குறையினைத் தவிர்க்கும் பொருட்டு கண்மூடித்தனமாக குளங்கள், கால்வாய்கள் மற்றும் கடற்கரையோரங்கள் என பல இடங்களில் அத்துமீறிய வகையில் குடியிருப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையானது தொற்று நோய்கள், வெள்ளப் பெருக்கு போன்ற இடர்களை ஏற்படுத்தி வருவதுடன் இயற்கை அழகிலும் முழுமையான பாதிப்பினை ஏற்படுத்தி வருகின்றது.

பௌதீக மற்றும் உட்கட்டுமானங்கள் சுரண்டப்படுதல்

 • இவை யாவற்றுடனும் இணைந்ததான சமூகச்சிக்கல்

நெருக்கமான வீடுகள், அதிகமான வீடுகள் சமயலறை மற்றும் ஒரு படுக்கை அறை என அடிப்படை வசதிகள் குறைவாகக் கொண்டு இருத்தல், கூட்டு குடும்பங்களாக வாழுதல்;, பெரும்பாலானோர் கடற்றொழிலில் ஈடுபட்டு வருவதனால் கடுமையான உடலுழைப்பானது மதுப்பயன்பாட்டை ஊக்குவிப்பதுடன் பொழுதுபோக்கு விடயங்கள் குறைவாகக் காணப்படுதல் என்பன சமூகச் சிக்கல்களினை ஏற்படுத்தி வருகின்றன.

 • நிலையற்ற பொருண்மிய வளர்ச்சி

இங்கு ஏற்கனவே கடற்தொழிலுடன் இணைந்த கருவாடு, வலைபின்னல், உறைபனிக்கட்டித் தொழிற்சாலை (Ice Factory) என பல்வேறு சிறு கைத்தொழில்கள் நடைபெற்று வந்தாலும் இவை மிகவும் ஆரம்ப நிலையிலேயே காணப்படுவதுடன் நிரந்தரமான வருமானத்தினையோ தொழில் வாய்ப்புகளினையோ தருவதாக இல்லை அத்துடன் பெரும்பாலான மக்கள் மீன்பிடித்தொழிலில் மட்டுமே ஈடுபட்டு வருவதனால் நிலையற்ற வருமானமானது வாழ்வியலைப் பாதிக்கின்றது.

மீன்பிடித்துறைக்கு பொருத்தமான உட்கட்டுமானங்களின் திருப்தி அற்ற நிலை

3. தீர்வுகள்

மேற்குறிப்பிட்ட சிக்கல்களிற்கு தீர்வுகாணும் முகமாக பின்வரும் அபிவிருத்திக் கொள்கைகள் முன்வைக்கப்படுகின்றன.

 • பிரதேச மக்களின் வாழ்வியலினை விருத்தி செய்தல்
 • பிரதேச பௌதீக வளங்களினை பாதுகாப்பானதாக இயன்றளவில் பயன்படுத்திக்கொள் ளுதல்
 • மீன்பிடித்துறையும் அதனுடன் இணைந்த கைத்தொழில்கள் மற்றும் சுற்றுலாத்துறை அபிவிருத்தி மூலமாக பொருண்மியத்தினை விருத்தி செய்தல்

இவ்விலக்குகளை அடைவதற்காக கீழ்வரும் தந்திரோபாயத் ;திட்டமிடல் உத்திகள் முன்வைக்கப்படுகின்றன.

அட்டவணை – 01 இப்பிரதேச விருத்திக்கான தந்திரோபாயத் திட்டமிடல்

   
தந்திரோபாயங்கள்செயற்பாடுகள்
Population Strategies ( மக்கள்தொகை உத்திகள்)·          வேலைவாய்ப்பினை வழங்கக் கூடிய வகையில் ஏனைய மீன்பிடிப் பிரதேசங்களினை விருத்தி செய்தல்
அதிகரித்து வரும் மக்கள்தொகையினைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக குடிப்பெயர்ச்சியினைத் தூண்டக்கூடிய நடவடிக்கைகளினை மேற்கொள்ளல் ·          ஏனைய தொழில்சார் பயிற்சிகளை வழங்குதல்
Housing Development ( வீட்டு அபிவிருத்தி)யாழ் நகரில் குடியிருப்பு தொடர்பான பிரச்சினையானது அதிகமாக கடற்கரையோரக் கிராமங்களான குருநகர் ( J/68,J/69 ) மற்றும் நாவாந்துறை ( J/84,J/86, J/87 ) பகுதிகளில் இனங்காணப்பட்டுள்ளது . இங்கு இப்பிரச்சினையானது நிலப்பற்றாக்குறையும் அதனுடன் இணைந்ததான பொருத்தமற்ற குடியிருப்பு முறை , சுகாதார வசதியின்மை என்ற வடிவமைப்பினையே பெற்றுள்ளது . அந்தவகையில் இச்சிக்கலிற்கான தீர்வாக … .
·          ஏற்கனவே உள்ள வீடமைப்புத்திட்டத்தினை வினைத்திறனான முறையில் மறுவடிவமைத்தல் .
அந்தவகையில் 1950 களில் பிரேமதாச அரசாங்கத்தினால் 5 மாடிக்கட்டிடமானது அமைக்கப்பட்டது . இங்கு தற்போது ஏறத்தாழ 50 க்கும் அதிகமான குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன . இப்பிரதேசம் ; பௌதீக வளர்ச்சியிலோ சமூக வளாச்சியிலோ எந்த விதமான மாற்றங்களும் ஏற்படாமல் வெறுமனே இவ்வைந்து மாடிக்கட்டிடத்திற்கு நிறபூச்சுக்கள் மாத்திரம் மாற்றம் பெற்றுவருகின்றது . அந்த வகையில் தனித்ததாக இக்கட்டிடத்தினை மட்டும் மீள்திட்டமிடாமல் இதனுடன் இணைந்த இப்பகுதியினை பின்வருமாறு திட்டமிடலாம் .( பார்க்க இணைப்பு 1)
·          அரச காணிகளினை தெரிவு செய்து அல்லது தனியார் காணிகளினை முறையான சுவீகாரமுறையினை மேற்கொள்ளுவதன் மூலமாக பொருத்தமான முறையில் வீடமைப்புத்திட்டங்களினை மேற்கொள்ளுதல்
இங்கு காணிகளினை வழங்குதற்கு பதிலாக பொருத்தமான திணைக்களங்களின் தலையீட்டுடன் வீடுகளினை அமைத்துக் கொடுத்தல் அல்லது வீட்டு வடிவமைப்பு ( Residential Design) மற்றும் நிதி மூலங்களிற்கு அமைத்துக் கொடுத்தல் .
·          தனியார் வீடமைப்புத் தொடர்பாக பொருத்தமான வழியூட்டல்களை வழங்குதல் .
எ - கா : நடைமுறையிலுள்ள வீட்டுத்திட்டங்கள் குடியிருப்புப் பற்றாக்குறை தொடர்பாக தற்காலிகமான தீர்வினையே வழங்கி வருகின்றது . குடும்பங்களின் அளவு, அடிப்படை வசதி மற்றும் எதிர்கால தேவை என்பவற்றினைக் கருத்தில் கொண்டு திட்டமிட்ட குடியிருப்புக்கள் அமைப்பதற்கு ஏற்பாடு செய்தல் .
·          மாடி வீடுகள் அமைத்தல்
·          ஒன்றிற்கு மேற்பட்ட தனியார் காணிகளை ஒன்றிணைத்து அவற்றிற்கான வடிவமைப்பினை (Design) அமைத்தல் . இங்கு காணி சுவீகரித்தலோ சட்டரீதியாக காணிகள் ஒன்றிணைக்கப்படுதலோ இன்றி காணிகளினை தொகுதியாக கருதி தோட்டம் மற்றும் விளையாட்டிடம் ( Garden and Play area) என பல இயல்புகளினை உள்ளடக்கியதாக சிறந்த வீடுகளிற்கான வடிவமைப்பினை (design) அமைத்தல் .
·          கடன்வசதிகள் ஏற்பாடு செய்து கொடுத்தல்
Economic Development ·          சுற்றுலாத்துறை விருத்தி
( பொருண்மிய வளர்ச்சி)-      - கடற்கரையோரமானது முழுமையாக பொழுது போக்கிற்கு ஏற்றதாக அமையாவிட்டாலும் அவற்றில் பொருத்தமான சில இடங்களினைத் தெரிவு செய்து அவற்றினை விருத்தி செய்தல் .( பார்க்க - இணைப்பு 2)
-       
-      - சுற்றுலாக்கைத்தொழிலுடன் இணைந்ததான விருத்தி
·          ஏற்கனவே உள்ள மீன்பிடிக்கைத்தொழிலுடன் இணைந்ததான தொழில் முயற்சிகளினை விருத்தி செய்தல் ( Dry fish, fishing Nets & ice factory )
படகு அமைத்தல்
·          வீதிகளினைச் சீரமைத்தல்
Infrastructure Development-      வீதி மேற்பரப்பு , வீதி அகலிப்பு
-      தெரிவு செய்யப்பட்ட வீதிகளில் நடைபாதை மற்றும் ஈருருளிப்பாதை என்பவற்றினை அமைத்தல்
-      தெரிவு செய்யப்பட்ட வீதிகளில் மரங்கள் நாட்டுதல்
-     தெரிவு செய்யப்பட்ட வீதிகளில் நீர் ஊடுபுககூடிய வகையில் செய்தல்
-      தெரிவு செய்யபட்ட வீதிகளினை பாதசாரிகளின் பயன்பாட்டிற்கு மட்டும் அனுமதித்தல்
-      ( பார்க்க - இணைப்பு 3)
·          குளங்கள் மற்றும் கால்வாய்கள் அபிவிருத்தி
-      அத்துமீறிய கட்டிடங்களினை அகற்றி கால்வாய்களின் ஓட்டத்தினை சீராக்குதல்
-      தூர்ந்துள்ள குளங்களினை சீர்செய்தல்
( பார்க்க - இணைப்பு 4)
·          மீன்பிடிக்கைத்தொழில் சார்ந்த உட்கட்டுமான விருத்தி
-      இறங்குதுறை
-      சந்தை அபிவிருத்தி
-     வலை ( பார்க்க இணைப்பு 02)
Recreational Development·          பொது இடங்கள் அமைத்தல் (Public Space)
( பொழுதுபோக்கு வசதிகள் )
-      தெரிவு செய்யப்பட்ட இடங்களில் கடற்கரையோர அபிவிருத்தி ( பார்க்க இணைப்பு 05)
-      தெரிவுசெய்யப்ட்ட குளங்களினை பொருத்தமான அணுகுமுறையுடன் பொதுப் பயன்பாட்டிற்குட்படுத்தல் ( பார்க்க இணைப்பு – 03)
-      பசுமைப்போர்வை விருத்தி ( இணைப்பு – 06)
-      புதிய பொது இடங்களினை அமைத்தல்
-      பொது இடங்கள் யாவற்றினையும் ஈருருளிப்பாதைகள், நடை பாதைகள் அல்லது நிழல்தரு மரங்கள் என ஏதோ ஒரு வலைப்பின்னல் மூலம் இணைத்தல்
-      சனசமூக நிலையங்கள் மற்றும் சந்தைகளினை தனித்த பயன்பாட்டிற்குட்படுத்தாமல் பல்வேறு பயன்பாட்டிற்குட்படுத்தல்

இணைப்பு 1 – ஐந்து மாடி வீடமைப்புத்திட்ட மீள் திட்டமிடல்

    
தற்போதைய நிலை Proposal ( திட்டமுன்மொழிவு)
·          பொருத்தமான வினைத்திறனான கட்டிட வடிவமைப்பிற்கு மாற்றுதல் . ( form of the Building - Typology)
·          ஏறத்தாழ 50 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்தல்·          தற்போது உள்ள குடும்பங்களின் அளவினை விட 2 மடங்கு குடித்தொகையினை உள்வாங்கக் கூடிய வகையிலும் ( densification ) (100 x 2) குடும்பங்களின் அளவிற்கு ஏற்பவும் வடிவமைத்தல் . இங்கு மொத்தப் பரப்பளவு (total area) மாறுபடாமல் இருக்க உட்புறவடிவமைப்பினை ( interior design ) மாற்றுதல் .
·          கடற்கரையோரத்தினை அண்டி காணப்படுதல்·          கடற்கரையினை மிக அண்டியதாக இக்காணி இருப்பதன் காரணமாக சிறந்த பார்வையினைக் (view) கொடுக்கக்கூடிய வகையில் உயர வேறுபாடுகள் கொண்ட மற்றும் cluster அமைப்பினைக் கொண்ட மாடிக் கட்டிடங்களினை அமைத்தல் .
·          போதிய உட்கட்டுமானங்கள் அற்ற வினைத்திறனற்ற கட்டிடம்·          பெரும்பாலான குடும்பங்கள் மீனவத்தொழிலில் ஈடுபட்டு வருவதனாலும் பொது நிகழ்வுகள் மற்றும் குடும்ப நிகழ்வுகளில் ஈடுபடுவதில் அதிகமான ஈடுபாடு கொண்டுள்ளதனாலும் தரைத்தளத்தில் ( Ground floor ) திறந்தவெளி ( open space)/ பகிரப்பட்ட இடம் (Shared Space) மற்றும் மொட்டை மாடி தேவையானது என்ற நிலையில் அத்தகைய அமைப்புக்களினை உள்வாங்குதல்
·          வினைத்திறனற்ற நிலப்பயன்பாட்டு முறை ( இவ்வளாகத்தினுள் . ஒரு குடியிருப்புத் தொகுதிக்கு தேவையான பொதுவான இயல்புகள் காணப்படினும் அவை சிறந்த முறையில் அமைக்கப்படவில்லை . எ . கா :: கட்டிடங்கள் ஒன்றையொன்று நோக்கவில்லை (not facing each other ). மேலும், இளைப்பாறும் இடங்கள் , திடல் என்பன காணப்படினும் அவை சிறந்த முறையில் வடிவமைக்கப்படவில்லை . மேலும் இங்கு குடியிருப்புக்களிற்காக ஒதுக்கப்பட்ட நிலத்தினை விட திடலிற்கு என மிகப்பெரிய நிலமானது ஒதுக்கப்பட்டுள்ளது . உண்மையில் இத்திடலானது அதனைச்சுற்றியுள்ள பகுதி முழுவதற்குமான ஒரு திறந்தவெளியாக ( open space) இது அமைந்துள்ள போதிலும் இங்குள்ள நிலப்பற்றாக்குறையினைக் கருத்தில் கொண்டு கடற்கரைப்பகுதியில் முறையான திட்டமிடலின் கீழ் விளையாடுவதற்கு ஏற்ற அமைப்புக்களினை அமைத்தல் .
·          கட்டிடத்தினை இவ்வாறே பேணிப்பாதுகாப்பதா அல்லது மீள கட்டுமானம் செய்வதா என்பது ஆய்விற்கு உரியதாகின்றது .·          நடுப்பகுதியில் திறந்தவெளியினைக் ( Open Space) கொண்டதாகவும் காற்றிடை வெளிகள் கொண்டதாகவும் மாடிகளினை அமைத்தல் .
·          இங்குள்ள குடியிருப்புகள் தங்களுக்கு மின்சாரத் தேவையில் 50 வீதத்தினை தாங்களே தயாரித்தல் ( Renewable Energy )
·          Small retail shop, service shop vd Mixed used development ஒன்றினை ஊக்குவித்தல்

எனவே வீடமைப்பு அதிகார சபைக்கு சொந்தமான இவ்வீட்டுத்திட்டத்தினை மேற்குறிப்பிட்ட வகையில் அபிவிருத்தி; செய்வதற்கான நிதி மூலங்கள் திரட்டுதல் கடினமானது என்கிற வீடமைப்பு அதிகார சபைக்கு பின்வரும் தந்திரோபாயங்கள் முன்மொழியப்படுகின்றது.

 • கூட்டு ஒப்பந்தம்- Joint Venture (Public + Private)
 • நீண்டகால கடன் வழங்குதல் – 60% வீடமைப்பு அதிகார சபை 40% குடியிருப்பாளர் முதலீடு செய்தல்
 • அடமான நிதி (Mortgage Financing)
 • வீட்டுவரி நிவாரணம் (Housing tax relief)

இணைப்பு 02 – கடற்கரையோர அபிவிருத்தி

இப்பிரதேசம் மாத்திரம் அல்லாமல் முழு நகரத்திற்குமே மிக முதன்மையான பொருண்மிய வளமாக இக்கடல்வளம் அமைகின்றது. பொதுவாக இக்கடற்கரையானது குறிப்பாக மீன்பிடிக்கே உகந்ததாக காணப்படுகின்றது. எனினும் மீன்பிடித்துறையும் அதனுடன் இணைந்த பொருண்மிய நடவடிக்கைகளினை மேலும் பல மடங்குகளிற்கு விருத்தி செய்தலும் மீன்பிடியை பாதிக்காத வகையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்குட்படுத்தப்பட்ட பிரதேசமாக இதனை மாற்றுதலினைப் முதன்மை எண்ணணக்கருவாக இத்திட்டம் முன்மொழிகின்றது.

 • தற்போது மீன்பிடி வள்ளங்களினை நிறுத்துவதற்கு உரிய உட்கட்டுமானங்கள் இல்லாத காரணத்தினால் கடற்கரை நீளத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனை சீர்செய்யும் முகமாக ஏற்கனவே உ;ள்ள இறங்குதுறையை மீண்டும் உரிய முறையில் வினைத்திறனாக விருத்தி செய்தல்.

ஏற்கனவே உள்ள மீன்பிடி இறங்கு துறைகளினை மீண்டும் இயங்க செய்தல்

 • யாழ் நகருக்கு அண்மித்ததாக உள்ள மண்டைதீவு, குருசோ தீவு ஆகிய அண்மித்துள்ள இடங்களில்  கடற் சூழலியலுக்கு (marine ecology) எந்த விதமான பாதிப்புகளும் இல்லாமல் Eco-tourism இனை மேம்படுத்தல்.
 • இங்கு ஏற்கனவே பயன்பாட்டிலுள்ள செயற்பாடுகளினை அடிப்படையாகக் கொண்டு வரையப்பட்ட எண்ணக்கரு மாதிரி வரைபடத்தில் காட்டப்பட்டுள்ளபடி கடற்கரையோரம் முழுவதும் கரையின் இயல்பு மற்றும் பொருத்தபாடு என்பவற்றிற்கு ஏற்றவாறு வேறுபட்ட செயற்பாடுகளை அறிமுகப்படுத்தல். இவை அனைத்தினையும் ஒருங்கிணைக்க கூடிய வகையில் ஈருருளிப்பாதை மற்றும் நடைபாதைகள் அமைத்தல்.

நடைபாதைகளோ அல்லது ஈருருளிப்பாதை அமைப்பதற்கு போதிய இடவசதி இல்லாத இடங்களில் அவை இரண்டையும் ஒன்றாக இணைத்தல் அல்லது உள்ளக வீதிகளினூடாக வேறுவழியில் திருப்பி (diversion) மீண்டும் கடற்கரையுடன் இணைத்தல்.

 • ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள மீன்பிடிச்சந்தைகள் குறிப்பிட்ட நேரங்கள் மட்டும் இயங்கி வருவதனால் அவற்றினை முழுநேரமும் இயங்ககூடிய வகையில் கலப்பு அபிவிருத்தியாக (mixed development) மாற்றுதல்.
 • இப்பிரதேசதத்தில் உள்ள பொது தேவாலயங்கள், பொதுச் சந்தைகள், பொது அரங்குகள், கடற்கரையோரம், குளங்கள் ஆகியவற்றினை கடற்கரையோரத்துடன் நெருக்கமாக இணைத்தல்.

இணைப்பு – 03 வீதி அபிவிருத்தி 

இணைப்பு 04 – குளங்கள் மற்றும் வடிகால் அபிவிருத்தி

இப்பிரதேசதத்தில் கிட்டத்தட்ட 13 எண்ணிக்கையான குளங்களும் ஏறத்தாழ 7 நீர் வெளிச்செல்லும் வழிகளும் (outlets) காணப்படுகின்றன. இவற்றில் ஒரு சில குளங்கள் .குடியிருப்புப் பிரதேசங்களாக மாற்றப்பட்டுள்ளதுடன் சில இடங்களில் வடிகால்களினை அத்துமீறி குடியிருப்புகள் அமைக்கப்பட்டும் உள்ளது. இந்நிலையானது  வெள்ளப்பெருக்கு, தொற்றுநோய்கள், பௌதீக வளங்கள் சுரண்டப்படுதல் என பல்வேறு சிக்கல்களினை தோற்றுவித்து வருகின்றது. எனவே குளங்கள் மற்றும் வடிகால் அபிவிருத்தியானது; நீரின் தரத்தினை அதிகரித்தல், வெள்ளப்பெருக்கினைத் தடுத்தல், பொழுதுபோக்கக்கூடிய சமூக இடங்களினை (Recreational community Space) உருவாக்குதல் எனும் அடிப்படைக்கொள்கைகளினைத் தழுவி அபிவிருத்தியினை பின்வரும் உத்திகளின் அடிப்படையில் விருத்தி செய்யலாம் என பரிந்துரை செய்யப்படுகின்றது.

 • குளங்கள், வடிகால்கள் மற்றும் கடற்கரையோரங்களினை குறிப்பிட்ட மாத இடைவெளியில் சுத்திகரித்தல்
 • அழகுபடுத்தலும் மக்கள் பொதுப்பயன்பாட்டிற்கு ஏற்றபடி அமைத்தலும்

இணைப்பு  05 – பொது இடங்கள் அபிவிருத்தி

 

இணைப்பு 06 – Green Space Development (அபிவிருத்தி)பசுமைவெளி

இங்கு பசுமைப் போர்வையின் அளவு மிகக் குறைவாகவே காணப்படுகின்றது. எனினும் ஒப்பீட்டு அடிப்படையில் யாழ் நகரிலுள்ள ஏனைய பகுதிகளினை விட வீதியோரங்களிலும் பொது இடங்களிலும் நிழல்தரு மரங்களின் எண்ணிக்கையானது அதிகமாகக் காணப்டுகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும். எனினும் இப்பிரதேசம் கடலுக்கு அண்மையில் இருக்கின்றமை,  பிரதேச முக்கியத்துவம், அழகு மற்றும் நுண்காலநிலையுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளமை என்பனவற்றின்  அடிப்படையில் தற்போதுள்ள பசுமைவெளியினை (Green Space) விட 5 மடங்காக அதிகரித்தல் என்ற கொள்கை அடிப்படையில் பின்வரும் உத்திகள் முன்வைக்கப்படுகின்றன.

 • Green Belt இனை உருவாக்குதல்

தற்போது கடற்கரைப் பூங்காவில் (Beach Park) மட்டுமே நிழல்தரு மரங்கள் காணப்படுகின்றது.

கடற்கரையோரத்தினைத் நிழல்தரு மரங்களினை நாட்டுதல்.

இங்கு பல இடங்களில்   இடப்பற்றாக்குறை காணப்படுகின்றது. இவ்விடங்களில் அவற்றை பசுமை மதில் (Green Wall) போன்ற எண்ணக்கருக்களை கட்டிடங்களில் அறிமுகப்படுத்தல் என வேறு வகைகளில் பயன்படுத்தல்

 • ஏற்கனவே உள்ள பொது இடங்களிலும் பூங்காக்கள் என்பவற்றில் நிழல்தரு மரங்களை  அமைத்தல். (நிரந்தரமான மரங்கள், தற்காலிகமான செடிகள் என அமைத்தல் அல்லது இஙகுள்ள Storm water வடிகால்கள் பரமரிப்பின்றி காணப்படுகின்றது. இந்நிலையில் தெரிவு செய்யப்பட்ட வடிகால்களில் தற்காலிகமான அல்லது பருவகால செடிகளினை அமைக்கும் போது வடிகால்கள் பேணப்படும், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும், பிரதேசம் அழகு பெறும்)
 • உள்ளக வீதிகளிலும் முதன்மை வீதிகளிலும் மரங்களினை அமைத்தல். மக்கள் எந்தவிதமான வழிகாட்டுதலும் இல்லாமல் பல்வேறு உத்திகளினை பயன்படுத்தி மரங்கள் மற்றும் தற்காலியமான கொடிகளினை அமைத்துள்ளமை வரவேற்கத்தக்க விடயமாகும்.)
 • சிறந்த திறந்தவெளியினை (Open Space) உருவாக்குதல்

இங்குள்ள இடுகாடு (cemetery) ஒழுங்குபடுத்தப்படாத முறையில் எதிர்கால பயன்பாடுகளிற்கு பொருத்தமற்ற முறையில் உள்ளது. இங்குள்ள எச்சங்களை அகற்றி

எதிர்காலத்தேவைக்கு பயன்படுத்தல் என்பது பாரம்பரியம் மிக்க பகுதி ஒன்றில் கடிமானது  என்ற வகையில் இதனை பிணக்காடாகவே பேணிப்பாதுகாக்காமல் இதனுடைய சுற்றுச்சூழல் நடவடிக்கைகளினைக் கருத்தில் கொண்டு மனநிறைவான சூழல் ஒன்றினை ஏற்படுத்தும் வகையில் அதனுடைய உள்ளமைப்பினை சிறப்பான முறையில் வடிவமைக்குமாறு இயற்கைப்படுத்தல் (Landscaping) செய்வதனூடாக முறையான பராமரிப்புக்களினை செய்தல்.

 • பொதுக்கட்டிடங்கள் சமூக அபிவிருத்தி நிலையம் (Community Development Center), முன்மொழியப்பட்ட சந்தை (Proposed Market), முன்மொழியப்பட்ட வீட்டுத்திட்டம் (Proposed Housing Scheme) என்பனவற்றினை ஒருங்கிணைத்தல்

இவ்வாய்வுப்பிரதேசத்தில் தொழில்நுட்ப கல்லூரி, பொலிஸ் நிலையம் மற்றும் மீன்பிடித்திணைக்களம், மருத்துவமனை, சனசமூக நிலையங்கள் என பல திணைக்களங்கள் காணப்படுகின்றன. இக்கட்டிடங்களினை மீள நிர்மாணிக்கும் போது பசுமைவெளியினை (Green space) உள்வாங்குதல்.

 

தொடரும்..

சுஜா

19-07-2019

 5,194 total views,  2 views today