சோனகர் என்ற இனக்குழு அடையாளத்திற்குள் பொருத்தப்பாடில்லாமல் ஒளிந்து கொள்ளும் இசுலாமிய அடிப்படைவாதிகள் -சேனையூர் நந்தன்-

மதம் மாற்றப்பட்ட தமிழர்களை “தமிழ் இசுலாமியர்கள்” என்று அடையாளப்படுத்தாமல் “மூர் அல்லது சோனகர்” என்ற இனமாக அடையாளப்படுத்தி, தமிழர் தாயகத்தில் தமிழ் இசுலாமியரல்லாதோரை எண்ணிக்கைச் சிறுபான்மையாக்கி அதன் மூலம் தமிழர் தாயகத்தை இல்லாதழிக்கும் வேலைத்திட்டத்தை சிறிலங்கா அரசும் இசுலாமிய அடிப்படைவாதக் கும்பல்களும் தொடர்ச்சியாக ஈடுபட்டுவருவது யாவரும் அறிந்ததே. ஆனால் இத்தகைய செயற்பாடுகள் அண்மைக்காலமாக துரிதமாக முடுக்கிவிடப்பட்டுள்ளதனால் அதைத் தெளிவுபடுத்த வேண்டிய காலக் கடமையாக இந்தப் பதிவைத் தருகிறோம்.

……………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………….

இலங்கைத்தீவிற்கு மாற்றார்கள் வந்தமையால் இறைமையை இழந்து ஆட்சி அதிகாரத்தை இழந்து நிற்பது மட்டுமல்லாமல் மாந்த வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படை உரிமைகளையும் இழந்து நிற்கும் தமிழினம் நாள்தோறும் பெரும் நெருக்கடிகளை உள்ளிருந்தும் வெளியிருந்தும் சந்தித்து வருகிறது.

இலங்கைத்தீவானது சிங்களவர், தமிழர், சோனகர் மற்றும் பறங்கியர் என்ற நான்கு பெரும் இனக் குழுமங்களையும் இன்னமும் சில சிறு இனக் குழுமங்களையும் (மலாய் இனத்தவர், வேடுவர், மற்றும் பல) கொண்ட நிலப்பரப்பாகும். இங்கு சோனகர் (Moor) எனப்படுவோர் போர்த்துகேயர் இலங்கைத்தீவை வன்வளைத்து வைத்திருந்த காலப்பகுதியில் இலங்கைத்தீவிற்கு வணிக நோக்கில் வந்த ஐரோப்பிய அல்லது ஐரோப்பிய எல்லை நாடுகளில் இருக்கக் கூடிய இசுலாமிய குழுவினரான மொராக்கிய இனக்குழுமத்தைச் சேர்ந்த நாடோடிக் கூட்டமாவர். இந்த நாடோடி இசுலாமியக் குழுவானது போர்ததுக்கேயரால் வணிக நோக்கத்திற்காக இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு அவர்களால் மூர் (Moor) என்று அழைக்கப்பட்டனர். போர்த்துக்கேயர் வெளியேற்றப்பட்ட பின்னரும் இந்த மூர் இனக் குழுமம் இலங்கையில் தங்கி வணிகத்தில் ஈடுபட்டதுடன் தமது இசுலாமிய மதப்பரப்பலிலும் ஈடுபட்டது. கடற்கரைகளை அண்டிய பகுதிகளில் வணிக நோக்கத்திற்காக தங்கியிருந்த இந்த மூர் இனக் குழுமம் மெல்ல மெல்ல தனது மதப் பரப்பலைத் தீவிரப்படுத்தியது. பொருண்மிய அடிப்படையில் நலிவுற்றிருந்த தமிழ் மற்றும் சிங்கள இன மக்களிடையில் பொருண்மிய உதவிகளை வழங்கி அவர்களை இசுலாமிய மதத்திற்கு மாற்றிக் கொண்டனர். சம காலத்தில் பெருமளவிலான மொராக்கிய இசுலாமியர்களையும் (மூர்) இலங்கைத்தீவிற்குக் கொண்டு வந்து சேர்த்தனர். மண்ணின் குடிகளுக்கு முற்றிலும் மாறுபட்ட வெளீர் நிற தோலையுடைய மூர் அல்லது மொரக்கிய இனத்தவர்கள் தமிழில் சோனகர்கள் என்று அடையாளப்படுத்தப்பட்டனர்.

மூர் எனப்படும் இந்த மொராக்கிய நாடோடி இசுலாமியக் குழுக்களுக்கு ஜரோப்பிய நாடுகளில் வதிவிடயுரிமை வழங்கப்படாமையாலும், நிரந்தர வணிகம் பெரும் இன்னலை சந்தித்ததாலும்  தென்னாசிய மற்றும் அமெரிக்க நாடுககளில் சட்டத்திற்குப் புறம்பாகத் தங்கிப் பின்னர் அந்தந்த நாடுகளின் குடிமக்களாக மாறினர்.

சைவ மற்றும் பௌத்த சமயத்தினைப் பெருமளவில் பின்பற்றியிருந்த இலங்கைத்தீவில் இருந்த இரு தேசங்களிலும் வாழ்ந்த மக்களிடையில் காலனிய ஆட்சியாளர்கள் கிறித்துவ மத்தைப் பரப்பினர். தமிழ் மற்றும் சிங்கள கிறித்தவர்களை காலனிய ஆட்சியாளர்கள் உருவாக்கினார்கள். அதே நேரத்தில் வணிக நோக்கில் கொண்டுவரப்பட்ட மூர் என்று அழைக்கப்பட்ட மொரக்கியரகள் தமது பாதுகாப்பிற்காக இசுலாமிய மத்தைப் பரப்பினார்கள்.

போர்த்துக்கேயர்களிடம் இருந்து ஒல்லாந்தர் மற்றும் பிரித்தானியர்களிடம் இலங்கைத்தீவு கைமாறி வெள்யைளர்கள் வெளியேறியிருந்தாலும் கணிசமான அளவு மொராக்கிய நாடோடி இசுலாமியர்கள் தொடர்ந்து இலங்கையில் தங்கியிருந்தது மட்டுமல்லாது இசுலாமிய மதமாற்றத்தைத் தீவிரமாகச் செய்து அதன் மூலம் தமது வணிகக் கட்டமைப்பைத் தக்கவைத்துக் கொண்டனர்.

சோனகர்இசுலாமியர்அரசியல்

இலங்கைத்தீவில் சோனகர் அறிமுகப்படுத்திய வணிக உத்திகள் கவர்ச்சிகரமானதாக இருந்தமையால் “சோனகர்” என்ற அடையாளத்தின் மூலம் தமது வணிக நலன்களைத் தக்க வைக்க ஆரம்பித்தனர் இலங்கை இசுலாமியர்கள். அதனால் இலங்கை தமிழ் மற்றும் சிங்கள இசுலாமியர்களில் ஒரு குழுவினர் தங்களை தாங்களே சோனகர்களாகக் கற்பனை செய்து அரசியல் இரீதியாகவும் தாக்கம் செலுத்த ஆரம்பித்தனர். வெறும் வணிகத்திற்காகவே அரசியல் தாக்கத்தை செலுத்த ஆரம்பித்த இசுலாமியர்கள் ஒரு கட்டத்தில் சிங்கள பௌத்தர்களால் தாக்குதலுக்கு உள்ளாக ஆரம்பித்தனர். அந்தச் சந்தர்ப்பத்தில் தமிழ் சைவ மற்றும் கிருத்தவ தலைமைகளால் காப்பாற்றப்பட்டனர். அரசியல் இரீதியாகத் தங்களை சோனகர்களாக அடையாளம் காட்ட முற்பட்ட குறிப்பிட்ட இசுலாமியக் கும்பலானது கடுமையான இசுலாமிய அடைப்படைவாதங்களை முன்வைத்து வந்தது. குறிப்பிட்ட இசுலாமிய அடிப்படைவாதக் கும்பலானது தாக்குதலுக்குள்ளானதிலிருந்து நாசுக்காகச் செயற்பட ஆரம்பித்தது.

பெரும் பொருண்மிய பலத்தைத் திரட்டிய இசுலாமிய அடிப்படைவாதக் கும்பல் கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் இசுலாமியர்கள் சிங்கள இஸ்லாமியர்கள் என்ற அடையாளத்தை அழித்து தங்களையும் சோனகர்கள் (மொராக்கிய நாடோடி இஸ்லாமியர்கள்) என்று இனமாக அடையாளப்படுத்திக் கொண்டது. பணத்திற்கு விலைபோன சிங்கள ஆட்சியாளர்கள் இந்த மடைமாற்றத்தைக் கண்டும் காணாமல் இருந்தனர்.

முசுலீம் என்பது இசுலாம் மத்தைப் பின்பற்றுபவர்களைக் குறிக்கும் சொல்லே தவிர அது இனம் அல்ல என்பது உலகறிந்த உண்மையாக இருக்க, விலைபோன சிங்கள ஆட்சியாளர்கள் இலங்கையில் முசுலீம் என்பது இன்னொரு இனமாகப் பதிவேடுகளில் அடையாளப்படுத்தப்படுவதைக் கண்டும் காணாமலும் அல்லது பிறிதொரு தேவைக்காக வாய்மூடி வருகின்றனர்.

சோனகர்கள், சிங்களவர்கள் மற்றும் தமிழ் இசுலாமியர்களும் தமிழீழமும்

தமிழீழமானது இலங்கைத்தீவின் வடக்கு, கிழக்கைத் தாயக நிலப்பரப்பாகக் கொண்ட தமிழர்களின் தேசம் எனிலும், தமிழீழ நிலப்பரப்பில் வாழும் பிற இனத்தவர்களான சோனகர்கள் (மொராக்கிய நாடோடி இஸ்லாமியர்கள்), சிங்களவர்கள், வேடுவர்கள் மற்றும் மலாயர்களையும் அரவணைத்து அவர்களையும் தமிழீழத்தின் சிறுபான்மையினராக ஏற்று அவர்களுக்கான உரிமைகளையும் உறுதிப்படுத்துகிறது தமிழீழம். அதே நேரத்தில் தமிழ் இசுலாமியர்கள் என்ற மண்ணின் குடிகளும் தமது அடையாளத்தை மறைத்துத் தங்களை சோனகர்களாக அடையாளம் காட்டி வெறித்தனமான இசுலாமிய அடிப்படைக் கொள்கைகளைத் தமிழீழத்திற்குள் பரப்பி தமிழர்தேச விடுதலைக்கும் தமிழர்தேச இறையான்மைக்கும் குந்தகம் விளைவிக்கும் அடிப்படைவாத இசுலாமியக் கும்பல்கள் தமிழர் தேசத்திற்கு எதிரான சிங்கள பௌத்த தீவிரவாதத்திற்கும் சற்றும் குறையாத எதிரிகள் என்றே அடையாளப்படுத்த வேண்டிய நிலை இன்று ஏற்பட்டிருக்கிறது.

தமிழ் இசுலாமியர்கள் விடுதலைப்புலிகள் அமைப்புடன் இணைந்து தமிழீழ விடுதலைக்கு உயிரையும் கொடுத்துப் போராடிய நிலையில், சோனகர் எனப்படும் மொராக்கிய நாடோடி இஸ்லாமியர்களின் அடையாளத்திற்குப் பின்னால் ஒழிந்து கொள்ளும் இசுலாமிய அடிப்படைவாதக் கும்பல்களின் சூழ்ச்சிக்குள் கட்டுண்டு கிடந்து தமிழ் இசுலாமியச் சமூகத்தின் பெரும்பகுதி தமது சொந்த இனத்திற்கு எதிராகவே திரும்பிய துன்பியல் நிலை ஏற்பட்டுள்ளது.

அரேபிய இசுலாமிய அடிப்படைவாதக் குழுக்களின் நிதி ஆதரவைப் பெற்றுத் தமிழர் தாயகப்பகுதியில் மதமாற்றங்களை செய்துவரும் இசுலாமிய அடிப்படைவாதக் குழுக்களால் இசுலாமியர்கள் பெருவாரியாக வாழும் தமிழர் தாயகப் பகுதிகளில் அரபியர்களின் பெயர்கள் வீதிகளுக்கு சூட்டப்பட்டுள்ளன. அரேபியர்களின் பெயர்களில் தமிழர் தாயகப்பகுதிகளில் குடியேற்றங்கள் நிகழ்த்தப்படுகின்றன. தமிழரல்லாத, தமிழர்களிற்கு எந்தவொரு தொடர்புமில்லாத பலர் தமிழர் தாயகப்பகுதிகளில் இசுலாமியர்களாகக் குடியேற்றப்படுகின்றனர்.

 

தமிழர் தாயகத்தில் இசுலாமிய மதவெறி

தென் தமிழீழத்தில் சிறிலங்கா அரசால் ஊர்காவல்படை என்ற பெயரில் இசுலாமிய அடிப்படைவாதத்தில் ஊறித்திளைத்த இளைஞர்களுக்கு போர்ப்பயிற்சி வழங்கப்பட்டுத் தமிழர்களுக்கு எதிராகத் திருப்பிவிடப்பட்டிருந்தனர். எண்ணுக் கணக்கற்ற நரபலி வெறியாட்டங்களை நிகழ்த்திய இந்த இசுலாமிய அடிப்படைவாதக் கும்பல் தமிழ் இசுலாமியர்களுக்கும் இசுலாமியரல்லாதோருக்கும் இடையில் பாரிய உறவு விரிசலை ஏற்படுத்தினர்.

இசுலாமியரல்லாத தமிழ் இளையோரைக் கொன்று குவித்தனர். வீதிகளில் வீசி இளையோரைக் கொழுத்தினர். தென் தமிழீழக் கரையோர ஊர்களில் இசுலாமிய அடிப்படைவாதக் கும்பலினால் இசுலாமியரல்லாத தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட படுகொலைகளானவை எண்ணிலடங்காதன.

இந்தச் சூழ்ச்சியினால் பாதிக்கப்பட்டது என்னவோ தமிழ் இசுலாமியர்களும் தமிழ் இசுலாமியரல்லாதோரும்தான். ஆனால் பயன் அடைந்தது தமிழரல்லாத இசுலாமிய அடைப்படைவாதக் கும்பல்களும் சிறிலங்கா அரசும். இந்த நிலையில் உணர்ச்சிவசப்பட்ட தமிழ் இசுலாமிய இளைஞர்கள் பலர் இசுலாமிய அடிப்படைவாதக் கும்பல்களின் பரப்புரைக்கும் பணத்திற்கும் மயங்கிப் போக தமிழ் இசுலாமியர்களுக்குள் ஊடுருவ ஆரம்பித்தது இஸ்லாமிய அடிப்படைவாதம். தூய தமிழில் பேசிக் கொண்டிருந்த தமிழ் இசுலாமியர்கள் பலரும் கொச்சைத் தமிழிலும் (இருக்கிறது என்பதை வேண்டுமென்றே இக்கி எனக் கொச்சையாக்குவது போல), தமிழ்த்தேசியத்திற்கு எதிராகவும் பேச ஆரம்பித்தனர். தமிழ் இசுலாமியர்கள் பலர் தங்களை வந்தேறி சோனகர்களாக காட்ட ஆரம்பித்தனர்.

சிறிலங்கா அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான அமைதி உடன்படிக்கையின் போது இசுலாமிய அடிப்படைவாதக் கும்பலான “ஜிஹாத் குழு” குறித்து விடுதலைப்புலிகள் சிறிலங்கா அரசின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தனர். “ஜிஹாத் குழு” குறித்த செய்திகளை சிறிலங்கா அரசும் இசுலாமிய அரசியல்வாதிகளும் மறைத்து வந்த நிலையில்,  போர்ப்பயிற்சி பெற்ற “ஜிஹாத் குழு” வின் மேல்மட்ட உறுப்பினர்கள் பலர் மூதூரில் வைத்து அழிக்கப்பட்டனர்.

உலகளாவிய இரீதியில் இசுலாம் மதத்தினை ஏராளமான இனங்கள் பின்பற்றியிருந்தாலும் எந்தவொரு இனமும் தமது இன அடையாளத்தை இழக்கவில்லை. ஆனால் ஈழத்தில் குடியேறிய மொராக்கிய நாடோடி இசுலாமியக் கும்பல் இன்று மாபெரும் அடிப்படைவாத இசுலாமிய குழுக்களைக் உருவாக்கி மிகவும் மிலேச்சத்தனமான அடிப்படைவாதத் திரிபுக் கொள்கைகளை தமிழர் தாயகப்பகுதியில் பரப்பிவருகிறது.

இசுலாம் மதத்திற்கு மாற்றப்பட்ட தமிழ்ப் பெண்கள் மிக மோசமாக அடிமைகளாக நடத்தப்படும் கொடுமை தமிழர் தாயக மண்ணிலேயே நடந்தேறிவருகிறது. தென்தமிழீழத்தில் இசுலாமியரல்லாத தமிழர்களின் சொத்துகளை அடாவடித்தனமாக சூறையாடும் இசுலாமிய அடிப்படைவாதக் கொடியவர்கள் தமிழினத்திற்கு மாபெரும் இடைஞ்சலாக மாறியிருப்பது எதிர்காலத்தில் பிறிதொரு போருக்கான இப்போதைய அறைகூவலாகவே தெரிகிறது.

இசுலாத்திற்கு மதம் மாற்றப்பட்ட தமிழ்ப் பெண்கள் தமது இன அடையாளங்களை அழிக்காமல் வைத்திருந்தாலும் அண்மைக்காலமாக இசுலாமிய அடிப்படைவாதக் கும்பல்களால் பல அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகி தங்களை அரபுக்கள் போல் உருமறைப்புச் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. தமிழர் தாயகத்திலேயே தமிழினப் பெண்களுக்கு எதிராக மதவெறிக் கும்பல்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் காட்டுமிராண்டித்தனத்தை தட்டிக் கேட்க முடியாத அளவிற்கு தமிழர்களின் அரசியல் பின்தள்ளப்பட்டிருக்கிறது.

தென்தமிழீழத்தில் ஏற்படுத்தப்பட்ட மதவெறியாட்டம் இன்றும் புற்றுநோய் போல் வடதமிழீழத்திலும் பரவ ஆரம்பித்திருக்கிறது. யாழ்ப்பாணம் கிளிநொச்சி முல்லைத்தீவு மன்னார் வவுனியா போன்ற நகரங்களில் அரபு தேசங்களைப் போல் கறுப்பு உடையணிந்த பெண்கள் வீதிகளில் நிறைந்து காணப்படுகின்றனர். தமிழர்தாயகத்தில் இந்த மதவெறிக் கும்பல் எப்படித் தன்னை வளர்த்துக் கொண்டது? அரேபிய நாடுகளில் இருக்கக் கூடிய இசுலாமிய அடிப்படைவாத அமைப்புகளின் நிதி மூலத்தில் ஏராளமான பள்ளிவாசல்கள் கட்டப்பட்டு வருகிறது.

யாழ்ப்பாணத்தில் கல்விகற்றுவந்த தமிழ் இசுலாமிய சகோதரி ஒருவர் திடீரென அரபுக்கள் போல் கறுப்புடையணிந்து வந்தார். அது பற்றிக் கேட்டறிந்ததில் பல உண்மைகளை அவர் தெரிவித்தார்.

அரபு நாடுகளில் பயிற்சிகளையும் பெருமளவு பண உதவிகளையும் பெற்றுவரும் இசுலாமிய மத குருக்கள் பௌத்த பிக்குகள் போல் தமது சமூகத்திற்குள் பெரும் ஆளும் ஆற்றல்களாக வளர்ந்துள்ளனர். வெறித்தனமாக மதம் பரப்புவதை மாத்திரமே வேலையாக கொண்டுள்ள இவர்கள் மதம் மாற்றப்பட்ட தமிழர்களை, மிக இறுக்கமாகவும் இசுலாத்தில் சொல்லப்பட்டுள்ளதாக சொல்லி பல கட்டுப்பாடுகளை விதிப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஈழத்தில் ஏனைய எல்லாப் பெண்களையும் போல இயல்பு உடையணியும் இசுலாமியப் பெண்கள் குறித்த தகவல்களை எடுக்கும் குறிப்பட்ட கும்பல் அந்தந்தப் பகுதி உலமாக்கள் மூலம் மிரட்டுவதோடு இசுலாத்துக்கு எதிரானவர்கள் என்று சொல்லி இசுலாமிய சமூகத்திற்குள் ஒடுக்குமுறைகளை மேற்கொள்வதாகவும் அந்த அச்சத்தினால் தான் அவர்கள் அரேபிக்கள் போல் உடையணிவதாகவும் சொல்லப்படுகிறது. இந்த நடைமுறை 2009 ற்கு பின்னர் தீவிரப்படுத்தப்பட்டிருப்தாகவும் தமிழ் இசுலாமியர்கள் சொல்கிறார்கள். இசுலாம் மதத்திற்கு மாற்றப்பட்டு திருமணம் செய்யப்பட்ட தமிழ் பெண்ணொருவர் தனது குடும்பத்தாருடன் பழக முடியாமல் நிர்ப்பந்திக்கபடுவதாகவும் கறுப்பு பர்தா அணிந்து முழுமையாக முகத்தை மறைத்துத்தான் தனது உறவுகளை சந்திக்கமுடியுமென்றும் தவறினால் இசுலாத்துக்கு எதிரானவர்கள் என்று மிரட்டப்படுவதாகவும் சொல்லியிருக்கிறார்.

அது போக இசுலாமியரல்லாத தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் சமூக சீரழிவுகளை உருவாக்குவதற்காக இசுலாமிய அடிப்படைவாத அமைப்புகள் பெருமளவிலான பணத்தை முதலீடு செய்கின்றன.

வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளில் போதைப் பொருள் பயன்பாடு மற்றும் சமூக சீர்கேட்டுப் பொறுக்கித்தனங்களின் பின்னணியில் ரிசாட் பதீயுதீன் மற்றும் “ரொப்பாஸ்” போன்ற வணிக நிறுவனங்களின் பின்னணி காணப்படுவது புலனாய்வு தகவல்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சிறிலங்கா நீதித்துறையை, சிறிலங்காவின் காவல்துறையை விலைக்கு வாங்கி அதன் மூலம் பாரிய அளவிலான அட்டூழியங்களில் இவர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் வாள்வெட்டுக் குழுக்களாக திரியும் கும்பல்களுக்கான நிதி மூல த்தில் ரிசாட் பதியுதீனும் ஒருவர் என்பதும் அதற்கான இடைத்தரகர் “ரொப்பாஸ்” என்பதும் பல தரப்புகளுக்கு தெரிந்தும் சட்ட இரீதியாக அணுகமுடியாத அச்சநிலை காணப்படுவதாக சொல்லப்படுகிறது. பருத்தித்துறை மற்றும் மாதகல் கடற்கரைகளினூடாக மிக மோசமான போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாகவும் அவற்றை பெற்றுக் கொள்ளும் தரப்பு இசு லாமியர்களாகவும் பின்னர் அவர்கள் இசுலாமியரல்லாத தமிழர்கள் மூலம் பிற இடங்களுக்கு போதைப் பொருட்களைக் கடத்துவதாகவும் சொல்லப்படுகிறது.

பெருமளவு பணத்தைக் கொட்டி, அரசியல் இரீதியாக மிரட்டி இன்று யாழ்மாவட்டத்தில் ஏராளமான இசுலாமியர்கள் வணிக நிலையங்களை கைப்பற்றியிருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் யாழ்மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

காலக் கடமை

இசுலாமிய அடிப்படைவாத அடக்கு முறைகளுக்கு எதிராக நெஞ்சுறுதியோடு செயற்படும் இசுலாமியத் தமிழ்ப்  பெண்கள் இன்னமும் இருக்கத்தான் செய்கிறார்கள். 2008 மாவீரர் நாள் நிகழ்வொன்றில் தமிழ் இசுலாமியப் பெண்கள் தமது குடும்பங்களில் இருந்து வீரச்சாவடைந்த மாவீரர்களுக்கு மாவீரர் துயிலுமில்லத்திற்கே சென்று அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. அது போல அரேபிய கலாச்சார முறையில் திணிக்கப்படும் உடை தொடர்பிலும், கல்வி கற்காமல் தடுக்கப்படுவதற்கு எதிராகவும், விளையாட்டு மற்றும் இன்ன பிற செயற்பாடுகளில் ஈடுபட முடியாமல் தடுக்கப்படுவதற்கு எதிராகவும் தமிழ் இசுலாமிய பெண்கள் பல இடங்களில் தமது எதிர்ப்புகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

தமிழர்கள் பின்பற்றும் ஏனைய மதங்கள் போலவே இசுலாமும் பார்க்கப்படல் வேண்டும். இசுலாத்தைப் பின்பற்றும் தமிழ் இசுலாமியர்களும் அதைப் புரிந்து கொள்ள வேண்டும். மாறாக தம்மைத்தாமே இனமாற்றம் செய்து “சோனகர்” அல்லது “மூர்” என்ற வந்ததேறிக் குடிகளாக அடையாளம் காட்டி தமிழ்த்தேசியத்திற்கு எதிரான இன்னொரு தரப்பாக அவர்கள் தொடர்ந்து செயற்படுவதென்பது பெற்ற தாய்க்கு எதிராக செய்யும் சூழ்ச்சிக்கு ஒப்பானது.

வெறித்தனமான ஆணாதிக்க கட்டமைப்பாக உருவாக்கப்படும் இசுலாமிய அடிப்படைவாதக் கருத்துக்களுக்கு எதிராக தமிழ் இசுலாமியர்கள் ஒன்றிணைய வேண்டிய கால கட்டாயம் உருவாகியுள்ளது. தமிழ் இசுலாமியர்களை தமிழ் இசுலாமியரல்லாதோரிடம் இருந்து அப்புறப்படுத்தி, வந்தேறி சோனகர்களாக அடையாளம் காட்டுவதன் மூலம் அரசியல் மற்றும் பொருண்மிய நயம் அடையப் போவது சிங்களப் பேரினவாதமும் அடிப்படைச் சோனகர்களுமே தவிர தமிழ் இசுலாமியர்கள் அல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

அடிப்படைப் புரிதல் இல்லாமல் தமிழ் இசுலாமியர்கள் சோனக மாயையில் தமிழர் தேசத்திற்கு எதிரான வேலைகளைச் செய்வார்களாயின், தமிழ் இசுலாமியரல்லாதோர், சிங்கள அடக்குமுறைக்கு எதிராக போராடுவது போல் இசுலாமிய அடிப்படைவாதக் கும்பலுக்கு எதிராகவும் போராட வேண்டிய இக்கட்டான நிலை ஏற்படும். அது குறிப்பிட்ட இசுலாமிய அடிப்படைவாதக் கும்பல்களைத் தமிழீழ நிலப்பரப்பில் இருந்து முழுமையாக அகற்ற வேண்டிய சூழலுக்குத் தள்ளும்.

-சேனையூர் நந்தன்-

2019-02-10