அறிவழிகளும் முன்மொழிவுகளும் – பகுதி 1 – சுஜா

கடந்த பதிவின் [ எதிர்காலத்தில் யாழ் நகரம் எவ்வாறு இருக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றீர்கள்? நகராக்க சிந்தனையில் ஒரு பார்வை ]  தொடர்ச்சியாக அறிவழிகளையும் முன்மொழிவுகளையும் 4 பகுதிகளாக வெளியிட இருக்கிறோம். 4 பகுதிகளும் பின்வரும் தலைப்புகளில் வெளியாகும்.

குடிமை மாவட்ட மண்டலம் – பகுதி 1 (Civic District Zone – Part 1)

நடுவண் வணிக மாவட்ட மண்டலம் – பகுதி 2 (Central Business District Zone – Part 2)

கரையோர மண்டலம் – பகுதி 3 (Coastal Zone – Part 3)

தீவு மண்டலம் – பகுதி 4 (Island Zone – Part 4)

அறிவழிகளும் முன்மொழிவுகளும் பகுதி 1

யாழ் நகரத்தின் வளர்ச்சியானது  வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிற்கு இடையில் வலுவான தொடர்பினை ஏற்படுத்துவதுடன் யாழ் மாவட்டத்தின் ஏனைய சிறு நகரங்களின் வளர்ச்சிக்கு அடிப்படையாகவும் அமையும் என்ற வகையில் இந்நகரத்தின் திட்டமிட்ட அபிவிருத்தி என்பது மிகவும் தேவையாகின்றது. அந்தவகையில் கீழ்வரும் அறிவழிகளும் முன்மொழிவுகளும் முன்வைக்கப்படுகின்றன.

1) யாழ் நகரத்தினை மையமாகக் கொண்டு பின்வரும் பிராந்திய நடுவங்களை (regional centers)  உருவாக்குதல்

 1. தொடர்வண்டி நகரம் (Railway town)- (முன்மொழிவு – UDA)
 2. செயலகம் (கச்சேரி)
 3. திருநெல்வேலி யாழ் பல்கலைக்கழகமும் அதன் மிக அருகாமைச் சூழலும் (immediate surrounding))
 4. தட்டாதெருச்சந்தி (யாழ் நகர எல்லைப்பகுதி)
 5. கல்வியங்காடு
 6. நெடுங்குளம் சந்தி

இவற்றினை வீதியின் இருமருங்கும் வளர விடாது மண்டல (வலய) ரீதியாக விரிவாக்கம் செய்தல் (Enhancement of the zones) , பிராந்திய நடுவங்கள் (regional centers) என்பவற்றினை போக்குவரத்து மற்றும் தொழிற்பாட்டு அடிப்படையில் வலுப்படுத்துவதுடன் யாழ் நகரத்துடன் இறுக்கமான தொடர்பினை ஏற்படுத்துவதுடன் முறையான திட்மிடலின் கீழ் சேவைகளினை மையக் குவிப்பற்றுப் பரவலாக்கம்  செய்தல் (decentralize)

2) ஏலவே நகர அபிவிருத்தி அதிகார சபையினால் யாழ் நகரத்தின் ஆற்றல் வளத்தின் (Potential) அடிப்படையில் கீழ்வரும் முதன்மையான அபிவிருத்தி மண்டலங்கள் (வலயங்கள்) பிரிக்கப்பட்டுள்ளன.

a)  நகர் நடுவண் அபிவிருத்தி (City Center Development)

b) தண்ணீர் முன் வளர்ச்சி மண்டலம் (Water front Development Zone) (Lagoon Development)

c) தீவு அபிவிருத்தி (Island Development)

d) குடியிருப்பு சார்ந்த அபிவிருத்தி (Residential Development) (கலப்புப் பயன்பாட்டு அபிவிருத்தியாக {Mixed Use Development} மாற்றுவது மிகவும் பொருத்தமானது)

இவற்றுடன் கீழ்வரும் விடயங்கள் சேர்த்துக் கொள்ளப்படுதல் மிகவும் பொருத்தமானதாகும்

 1. யாழ் நகரத்தின் தனித்தன்மை, வரலாறு, பண்பாடு என்பனவற்றை என்றைக்கும் நிலைநிறுத்தும் யாழ்ப்பாணக்கோட்டை, யாழ் மாநகர சபை, யாழ் நூலகம், யாழ்   நீதிமன்றம், சுப்பிரமணியம் பூங்கா, செல்வநாயம் தூபி ஆகியவற்றினை உள்ளடக்கிய பகுதியினை குடிமை மாவட்டமாக (Civic District) அறிவித்தல்;
 2. நல்லூர், காலனித்துவ குடியேற்றம் (Colonial Settlement) (1- 4 ஆம் குறுக்குத் தெருக்கள் {1st cross street to 4th cross street}) ஆகியவற்றினை பழமைசார்ந்த மண்டலமாகவும் (Conservative Zone)
 3. நகரத்தின் எல்லைப்பகுதியினை தொழில்துறை மண்டலம் (Industrial Zone) ஆகவும் அமைத்தல்-

வடமேற்குப்பகுதி

 1. குடிமை மாவட்டத்தில் (Civic District) இடம்சார்ந்த (spatial) ரீதியாக வினைத்திறனான மாற்றத்தினை ஏற்படுத்தவும் அதனை பகல் இரவு என இரு பொழுதும் இயங்க கூடிய வகையில் புதிய செயற்பாடுகளினை (activities) ஏற்படுத்தல்.

ஏலவே குறிப்பிட்டபடி இந்த குடிமை மாவட்டம் (Civic District) எனக் குறிப்பிட்ட பகுதியானது பண்ணைச் சந்தியிலிருந்து   தொடங்கி யாழ்ப்பாணக்கோட்டை, யாழ் மாநகர சபை, யாழ் நூலகம், யாழ் நீதிமன்றம், சுப்பிரமணியம் பூங்கா, தந்தை செல்வநாயம் தூபி, நகர அபிவிருத்தி அதிகார சபை கட்டடத் தொகுதி, புல்லுக்குளம் (Proposed) கலாசார மண்டபம், விரசிங்கம் மண்டபம் மற்றும் துரையப்பா விளையாட்டரங்கம் ஆகியவற்றினை உள்ளடக்கிய பகுதியாகும்.

 • யாழ்ப்பாணக் கோட்டையினை மரபுரிமை சார்ந்த சின்னமாக மட்டும் பயன்படுத்தாமல் நகர் நடுவில் உள்ள பொருண்மியத்தினை மேம்படுத்தும் நடுவமாகவும் தமிழரின் பண்பாட்டை எடுத்தியம்பும் வகையிலும் அமைத்தல் (Heritage is not only asset, it should contribute economic development of the city and should reflect the Tamilizan Culture).

அந்தவகையில் கீழ்வரும் செயற்பாடுகளினை (activities) நடைமுறைப்படுத்தலாம்.

 • யாழ்ப்பாண அருங்காட்சியகம் (museum), தொல்பொருள் துறை (department of Archeology). தொல்பொருளியல் திணைக்களத்தில் ஒரு பகுதி (Part of the Depart of Archeology), யாழ் பல்கலைக்கழகம் (University of Jaffna) என்பவற்றினை இடமாற்றுதல் (relocate).
 • யாழ்பாண பாரம்பரிய நடுவம் (heritage Centre)/ சுற்றுலாத்துறைத் திணைக்களம் (Tourism Department)/ விருந்தோம்பல் மற்றும் சுற்றுலா துறை (Hospitality and Tourism Department, Exhibition Centre)   அமைத்தல்.
 • புதிய செயற்பாடுகளினை நடைமுறைப்படுதத்தல் (New Activities)
 • உள்ளரங்க விளையாட்டு (Indoor Game (YMCA))
 • உடற்பயிற்சி (Fintness)
 • சிற்பப் பூங்கா அல்லது தாவரவியற் பூங்கா (Sculpture Garden or  Botanical Garden)
 • ஆயள்வேத மூலிகைத் தோட்டம்
 • யாழ்ப்பாண உணவு நிலையங்கள் , பண்பாட்டினை எடுத்தியம்பக் கூடிய பொருள் விற்பனை நிலையங்கள்

மாநகர சபை அல்லது தொல்பொருள் திணைக்களம் அல்லது கலாசாரத் திணைக்களத்தினால் மாதந்தோறும் ஏதாவது ஒரு நிகழ்வினை ஒழுங்கு செய்தல் (Cultural Show,  Carnatic Musical Event or Heritage Day, Lighting Event, Art or Painting Event for School Children or Adult)

இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் இப்பகுதியினை முழுமையாக இயங்க வைத்தல். இவ்வியக்கமானது இப்பகுதியினையும் இதனை அண்டிய பகுதியினையும் சிறந்த முறையில் தொழிற்படவைக்கும்.

 • ஏலவே திட்டமிட்டபடி யாழ் மாநகர சபையினை மீள அமைத்தல். இக்கட்டடமானது தமிழ் கட்டடக் கலையினை முழுமையாக எடுத்தியம்புவதுடன் இதனுடைய அனைத்து செயற்பாடுகளினையும் உள்ளடக்ககூடிய வகையில் சிறந்த உட்புற வடிவமைப்பினை (Interior Design) கொண்டிருத்தல்;
 • புதிதாக அமைக்கப்படவுள்ள நகர அபிவிருத்தி அதிகார சபை கட்டடத் தொகுதியானது தமிழ் கட்டடக் கலையின் எடுத்தொளிப்புடன் வினைத்திறனாக அமைக்கப்படல்
 • சுப்பிரமணியம் பூங்காவினுடைய மதில்களினை அகற்றி சிறந்த முறையில் இயற்கையோடியைந்த வனப்பூட்டல் (landscaping) செய்தல், உணவகம் (restaurant), சிறுவர் விளையாட்டு அமைவுகள் என்பனவற்றை அமைப்பதன் மூலம் இதனுடைய பயன்பாட்டினைக் கூட்டுதல், யாழ் நீதிமன்றத்திற்கான வாகன நிறுத்தகங்களை நீதிமன்ற வளாகத்தினுள் அமைப்பதன் மூலம் இப்பூங்காவினை மேலும் விரிவாக்குதல்.
 • இப்பகுதியில் தனியார் பேருந்து நிலையம் அமைப்பது தொடர்பாக முன்மொழிவு காணப்படுகின்ற போதிலும், ஒரு நகரத்தில் சிறந்த பொது போக்குவரத்து முறைமை (Public transport System) தேவையானதாகும். இருப்பினும் தனியார் முயற்சிகளினை வரவேற்று இவற்றிற்கான நிறுத்தகங்களை, முன்மொழியப்பட்ட தொடர்வண்டி நகரம் (Proposed Railway Town) போன்றவற்றை அமைக்கலாம் என்ற முன்மொழிவுடன் இவ்விடத்தில் தனியார் பேருந்து நிலையம் அமைப்பது தொடர்பான முன்மொழிவினை கைவிடுவதுடன் யாழ்ப்பாணக் கலாசார மண்டபம் அமைப்பதற்கான முன்மொழிவுகள் இருப்பதன் காரணமாக எதிர்காலத்தில் வீரசிங்கம் மண்டபத்தின் தேவைப்பாடு இல்லாத காரணத்தினாலும் இந்நிலத்தில் யாழ் மாநகர சபையானது சிறந்த அபிவிருத்தி ஒன்றிற்கான திட்டமிடலினை மேற்கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல் இப்பகுதியும் இதனை அண்டிய பகுதியும் அதிகமாக  அலுவலங்களினைக் கொண்டு இருப்பதனால் முன்மொழியப்படவுள்ள செயற்பாடுகள் இப்பகுதியினை இரவு நேரத்திலும் இயங்க வைக்க கூடிய வகையில் இருத்தல் தேவையானதாகும். (கலப்புப் பயன்பாட்டு அபிவிருத்தியினை mixed use development கொண்டு இருத்தல் தேவையானதாகும்)
 • மேலும் புல்லுக்குளம் இப்பகுதியிற்கே ஒரு தனி அழகினை கொடுக்கின்றது. . இதில் மரத்தினாலான சிறப்பு நடைபாதைகள் (Board walk), இதனைச்சுற்றி நடைபாதைகள், உணவகம் (Restaurant), உடற்பயிற்சிக் கருவிகள் (Exercise equipment), இதனுடன் இணைந்த நடவடிக்கைகளினை வழங்குவதன் மூலம் இக்குளத்தினை மேலும் மெருகு படுத்தலாம். அத்துடன் இதற்கு அணமையில் ஆனால் பின்புறமாக (not facing to pond) மருத்துவ மாணவர்களினுடைய விடுதி காணப்படுகின்றது. இவ்விடுதியினை

தெரிவு 1 – மருத்துவமனை வளாகத்தினுள் அமைத்தல்

தெரிவு 2- பொருத்தமான வேறு ஒரு இடத்தில் அமைத்தல் (இது அவ்விடம் சார்ந்த அபிவிருத்தியை மேலும் தூண்டும்

தெரிவு 3 –  குளத்தினை நோக்கியதாக ஊக்குவித்தல் (Activate facing to Pond)

இவ்வாறு மருத்துவ மாணவர் விடுதியினை இடமாற்று (relocate) செய்வதன் மூலம் ஏலவே நகர அபிவிருத்தி அதிகார சபையினால் புல்லுக்குளத்திற்கு அண்மையில் உள்ள ஒரு பசுமைப் பூங்கா (green Park) அமைப்பது தொடர்பான முன்மொழிவு காணப்படுகின்றது. எனவே தற்போதைய வீரசிங்கம் மண்டப காணி, முன்மொழியப்பட்ட தனியார் பேருந்து நிறுத்தகத்திற்கான நிலம் (Proposed Private Bus stand land), பசுமைப் பூங்காக்கான நிலம் (Green Park Land) மற்றும் மருத்துவ மாணவர் விடுதி நிலம் என இவை யாவற்றினையும் உள்ளடக்கியதாக பொருத்தமான வினைத்திறனான திட்டமிடல் செய்வதன் மூலமும் கோட்டையின் வெளிப்புற பகுதியில் சிறந்த முறையில் இயற்கையோடியைந்த வனப்பூட்டல் (landscaping) செய்வதன் மூலமும் சிறந்த ஒரு அபிவிருத்தியை இவ்விடத்தில் மேற்கொள்ளலாம்.

மேலும் இந்தக் குடிமை மாவட்டத்தில் (Civic District) அதிகமானளவு பொதுத் திறந்த வெளிகளினை (Public Open Space) உருவாக்குதல் மூலம் நடைபாதைக்கு மட்டுமானதாக்கல் (Pedestrianization) என்பது மிகவும் தேவையானதாகும்

மற்றும்  யாழ் தபால் நிலையமானது மிகவும் அதிகமான நிலப்பரப்பில் தனக்கான அலுவலத்தினை அமைத்துள்ளது. இக்கட்டடத்தினை அடர்த்தியதிகரிப்பு (Densification) செய்தவன் மூலம்; பல்வேறு பயன்பாடுகளிற்கு தபால் திணைக்கள வளாகம் பயன்டுத்தப்படலாம்.

மேலும் இலகு அணுகல் தன்மை (Accessibility) மற்றும் இலகு அசையுதன்மை (Mobility) போன்றவற்றினை அதிகரிப்பதன் மூலம் வலுவான தொடர்பினை ஏற்படுத்தல்

மேற்குறிப்பிடப்பட்ட முன்மொழிவுகளில் சட்டச் சிக்கல் காணப்படுகின்ற போதிலும் பேச்சுகள் (negotiation) மூலம் அவற்றினை தவிர்க்கலாம்.

பகுதி 2 இல் Central Business District (CBD) Zone தொடர்பான அறிவழிகளும் முன்மொழிவுகளும் இடம் பெறும்.

சுஜா

11-02-2018

Be the first to comment

Leave a Reply