புலிகள் ஒப்படைத்த போராட்டத்தின் தற்போதைய நிலை – ஆதவன்

March 26, 2017 Admins 1

2008 காலப்பகுதிகளில் போரானது உக்கிரத்தை எட்டியிருந்த நிலையில்; விடுதலைப்புலிகள் நிருவாக மற்றும் பன்னாட்டுச் செயற்பாடுகளில் பல முக்கியமான நகர்வுகளைச் செய்திருந்தார்கள். தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கையானது புலம்பெயர் இளையவர்களின் கைகளுக்கு மாற்றப்படுகிறது என்று தமிழீழ தேசியத்தலைவரே சொல்லுமளவுக்கு நகர்வுகள் ஒழுங்கு … மேலும்

ஊன்றிவிட்டுச் செல்லுங்கள் – திரு

March 25, 2017 Admins 0

உந்த வேடுவரின் கற்களுக்கு
எப்பேனும்
இந்த மாதிரியாய் தேன் கூடு
வரலாற்றில்
வெந்து வீழ்ந்தடங்கிப் போனதுண்டோ
தேனீக்கள்
நொந்து வீழ்ந்தாலும்
நூறொன்றாய்ச் செத்தாலும்
சந்து பொந்துகளில்
மறைந்திருந்த வேடரது
சங்குகளிற் போட்டுக் கலைக்காமல்
விட்டதுண்டோ..!

எந்தக்காலத்தில்
இப்படியாய்த் தேனீக்கள்
கையுயர்த்திக் கால் … மேலும்

இஸ்ரேலினைக் குற்றஞ்சாட்டும் அறிக்கை வெளியீட்டின் விளைவான ஐ.நா அதிகாரியின் பதவி விலகல் – தமிழாக்கம்: முல்லை

March 21, 2017 Admins 0

ஐக்கிய நாடுகள் சபை மீதான தமிழர்கள் உட்பட ஒடுக்கப்பட்ட மக்களின் பார்வை எவ்வாறு அமைய வேண்டும் எனத் தீர்மானிப்பதற்குதவும் ஒரு விடயமாக, அண்மையில் அல்ஜஷீராவில் 18.03.2017 அன்று வெளியாகிய இச்செய்தியமைவதால் காகம் இதைத் தமிழாக்கம் செய்கின்றது.

நிறவெறிக்கு ஒப்பான இஸ்ரேலின் நடவடிக்கைகளைக் … மேலும்

தமிழ்த் தேசியத்தின் காப்பியத் தேவையை முனைப்புறுத்தலுக்கான   மீள்வாசிப்பு ; சிலப்பதிகாரம் –  இன்றைய நோக்கில் – செல்வி –

March 19, 2017 Admins 0

“தமிழ்” என்பது மொழி என்ற அடையாளப்படுத்தலுக்கும் அப்பால் ஒரு பண்பாட்டு அடையாளமாகவும்  சமூக இயங்கியல் கோட்பாடாகவும் இனம் மொழி என்ற இரு தளங்களிலும் எம்மை இயக்கிக்கொண்டிருக்கின்றது. இப்போது எம்மால் வாசிக்கப்படுகின்ற தமிழ்மொழியானது  தமிழ் மரபு, தமிழ் வரலாறு என்ற வரையறைகளைத் தாண்டி,  … மேலும்

கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு (Structural Genocide) என்பதன் மெய்ப்பொருளினை அறிந்து செயற்படுவது இக்காலத்தின் கட்டாயம் -தம்பியன் தமிழீழம்

March 13, 2017 Admins 3

ஈழத்தமிழர்கள் மீது அரைநூற்றாண்டு காலமாகத் தொடர்ச்சியாக தமிழினவழிப்பு நடவடிக்கைகளானவை சிங்கள பௌத்த பேரினவாத அரச பயங்கரவாதத்தால் முனைப்புடன் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதன் உச்சமாக, பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் கொத்துக் கொத்தாக வகை தொகையின்றிப் படுகொலை செய்யப்பட்டதுடன், தமிழர்களின் இறைமையை உலகிற்குப் பறைசாற்றியிருந்த … மேலும்

புரட்சிகர மக்களை கட்சி ரீதியாக பிரிக்கும் பேரினவாதிகளின் திட்டம் – துலாத்தன்

March 12, 2017 Admins 0

“தமிழர்கள்” “தமிழர்கள் அல்லாதோர்” என்ற தமிழ்த்தேசிய சிந்தனையுடன் இயங்க வேண்டிய தமிழ் மக்களை “தமிழ்த் தேசிய கூட்டமைப்பார்” “சைக்கிள் காரர்” “ஈபிடிபி” “விஜயகலா ஆக்கள்” “அங்கயன் ஆக்கள்” என்று பலதரப்பட்ட குழுக்களாக பிரிவடைய வைப்பதில் சிங்கள மற்றும் தமிழ்த் தேசியத்தை விரும்பாத மேலும்

படைப்புப் பிரதிகளும் கருத்தாக்க வெளியும் : ஒரு நோக்கு – செல்வி (திருத்திய பதிவு)

March 6, 2017 Admins 0

படைப்புப் பிரதிகளும் கருத்தாக்க வெளியும் : ஒரு நோக்கு – என்ற தலைப்பில் செல்வி அவர்களால் எழுதப்பட்டு 2017-03-01 அன்று பிரசுரிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரையானது (http://www.kaakam.com/?p=605) ,அதனது ஆய்வு முறைமையில் முழுமையடையாது, ஒரு ஆய்வுப் பெறுதியை வழங்காமல் ஒரு இலக்கற்ற தளம்பலுக்குள்

மேலும்

படைப்புப் பிரதிகளும் கருத்தாக்க வெளியும் : ஒரு நோக்கு – செல்வி

March 1, 2017 Admins 0

 தனியன் ஒவ்வொன்றினதும் வாழ்வியல் இயங்கியலானது கட்டமைக்கப்பட்ட கருத்தியல்களின் அடிப்படையிலேயே இயங்கிக்கொண்டிருக்கின்றது. அந்த இயங்கியலின் அரசியலானது, ஒரு தனியனுக்கும் இன்னொரு தனியனுக்குமான ஊடாட்டத்தின் விளைபொருளாக மட்டுமல்லாது, தனியன் தன்னுடன் தான் ஊடாடுவதையும் குறிக்கும். அந்த வாழ்வரசியலுக்குள் உட்பட்டே ஒவ்வொரு மனிதனும் வாழ வேண்டிய … மேலும்