போட்டுள்ள நாய் வேடம் எலும்பு பொறுக்குவதற்கு மட்டுமல்ல குரைப்பதற்கும் தான் என்பதை மறவாதீர்கள்! – கொற்றவை

February 25, 2017 Admins 0

 “பிந்தி அளிக்கப்படும் நீதியானது மறுக்கப்படும் நீதிக்கொப்பானது”

   போர் நிறைவடைந்துவிட்டது. பாலாறும் தேனாறும் ஓடப்போவதாகவும் தங்கக்கிண்ணத்தைத் தாங்கி வந்து அள்ளி அள்ளிப் பருகக் கொடுக்கப் போவதாகவும் கூறி, தமிழ் மக்களைப் பிரிதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறிக்கொண்டிருந்த தரப்பினர்களும் இணைந்து நல்லாட்சித் தேரினை இழுக்க வடக்கயிற்றின் முன்னால் … மேலும்

பௌத்தமும் ஈழமும் – முனைவர் ஜெ.அரங்கராஜ் (ஆய்வறிஞர் ஓளவைக்கோட்டம் தஞ்சாவூர்)

February 23, 2017 Admins 0

            தமிழகத்தில் வழங்கும் சமயங்களினைப் புறத்தே இருந்து வந்த சமயங்கள் அகத்தே நிலவிய சமயங்கள் எனும் இரு பிரிவுகளில் அடக்கலாம். சமணம், பௌத்தம் முதலானவை சங்ககால தமிழ்ச் சமூகவியலில் புறத்தேயிருந்து வந்த பெருஞ்சமயங்களாகும். ஆசிவகம் தமிழகத்திலிருந்தே நாவலத்தீவு முழுதிற்கும் பரவிற்று என்று ஒருசாரரும், … மேலும்

பணிநிலை வேண்டுகை

February 20, 2017 Admins 0

தமிழ்த் தேசிய ஆய்வுப் பள்ளியினை ஆரம்பிப்பதை நோக்கியதான முதற்கட்ட இணைப்புப் பணிகளை ஒழுங்கு செய்வதற்காக www.kaakam.com என்ற இணைய முகவரியை உடைய இணையத் தளத்தை ஆரம்பித்தோம்.

இதற்காக, நீண்ட பரப்புக்களில் நுண்ணிய பல ஆய்வுகளைச் செய்ய வேண்டிய தேவையை நன்குணர்ந்து எமது … மேலும்

பலவீனமான தேசிய இனத்தின் பலமான போர் வடிவமாகவல்ல பொருண்மியப் போர்முறை (Economic Warfare) – தம்பியன் தமிழீழம்

February 14, 2017 Admins 0

உலகில் தேசிய இனங்களின் தன்னாட்சிக்கான போராட்டங்கள் சூழ்ச்சிகளாலும் கழுத்தறுப்புக்களாலும் ஒடுக்குமுறை அரச இயந்திரத்தின் ஈவிரக்கமற்ற அரச பயங்கரவாத நடவடிக்கைகளாலும் ஒடுக்கப்பட்டு, நசுக்கப்பட்டு, ஈற்றில் அந்த தேசிய இனம் தனது தலைவிதியைத் தானே தீர்மானிக்கும் ஆற்றலின்றியதாக்கப்பட்டு, மாற்றாரின் வருகைக்காகவும் ஒடுக்குமுறையாளர்களின் தயவுக்காகவும் கையேந்திக் … மேலும்

தமிழர்களிடையே உட்பகையும் அகமுரணும் : கற்க மறந்த பாடங்கள் – செல்வி

February 12, 2017 Admins 0

தொன்மைத் தமிழ்த்தேசிய இனத்தின் இருத்தலின் தொடர்ச்சியானது இனத்தின் மரபியலின் கூறுகளினைப் பற்றி போர் என்ற புள்ளியினால் இன்னமும் எழுதப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அடையாளத் தொலைப்பும் அடையாள மீட்புமென போரின் இருபெரும் கூறுகளும் தமக்குள்ளே முரண்பட்டு, இருப்பிற்கான தடங்களை பதித்து முடிவிலி தூரத்தில் ஓடிக்கொண்டிருந்தாலும், … மேலும்

கிழக்கின் உணர்வுகளை புரிதலிலேயே தாயக விடுதலைதங்கியிருக்கிறது. தெரிதலின் தடுமாற்றந்தணிய உளப்பாங்கினை செம்மையாக்குங்கள்! – கொற்றவை

February 8, 2017 Admins 0

      வெள்ளைநிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ

      வள்ளலடியிணைக்கு வாய்த்த மலரெதுவோ?

      வெள்ளைநிறப்பூலுமல்ல வேறெந்த மலருமல்ல

      உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது! – விபுலானந்தர்

ஒரு மண்ணின் மாண்பு ,  மொழியின் அடியாழம் ,அதன் பழக்கவழக்கங்கள், உயரிய பண்புகள், இழப்புகள், ஈகைகள் எதுவென்றாலும், அதன் … மேலும்

தூரத்தில் இருக்கின்ற தோழனுக்கு! – திரு

February 5, 2017 Admins 0

இப்போதும் உன் பெயரைச் சொல்லி விட முடிவதில்லை

எப்போதும் அது உள்ளே ரகசியமாய் இருக்கட்டும்

 

மீளுவதென்பதுவோ மிகக் கடினம் எனத்தெரிந்த

ஆழ ஊடுருவும் படையணியின் கூட்டமொன்றில்

இந்த முறையேனும் எனக்கிந்தச் சந்தர்ப்பம்

தந்தாக வேண்டுமென்று அடம்பிடித்தாய் ஆனாலும்

 

நாலு … மேலும்

உரிமைகேட்டு போராடுவது குற்றமல்ல தமிழினமே! – துலாத்தன்

February 5, 2017 Admins 0

2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் உருவெடுத்துவரும் மக்களின் பல பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் இழுபறிப்பட்டுக் கொண்டே வருகின்றது. இதற்கான காரணங்களாக திறமையற்ற அதிகாரிகள், ஊழல் நிறைந்த நிர்வாகமுறை, பொறுப்பற்ற அரசியல்வாதிகள் எனப் பட்டியற்படுத்தினாலும் எல்லாவற்றிற்கும் மேலாக மிக முக்கிய காரணம் மக்களின் விழிப்புணர்வற்ற … மேலும்