பொட்டம்மான் அகவை 60

November 28, 2022 Admins 0

வெளியில் தெரியாத
விளக்கே உளவின்
உளியில் எமை வார்த்த
கிழக்கே
எளிதில் புரியாத
மலைப்பே தமிழன்
அழியாப் புகழொற்றின்
தலைப்பே

பெருங் கடலின் அடியில்
பெயரின்றி ஓடிநின்ற
உருவங் காட்டாத ஆறே
ஒன்றாக நின்றோர்க்கு
உருகும் மெழுகாகி
உள்ளத்தைக் காட்டுமோர் பேறே… மேலும்

No Image

இது நடக்கும் – திரு-

September 15, 2020 Admins 0

தமக்கென்றோர் மொழி
தமக்கென்றோர் கலாச்சாரம்
தமக்கென்றோர் வாழ்வு முறை
தன்னை வடிவமைத்து
தன் போக்கில் வாழ்கின்ற
இனக் குழுமம் ஒன்றை
இடையிட்டுப் பெருகிவந்த
இன்னோர் இனம் வந்து
இடித்துத் தன் காலுள்
கண் முன்னே போட்டுக்
கதறக் கொழுத்தையிலே
அமுக்கம் தாளாமல்… மேலும்

படைப்புகளும் திறனாய்வும்- பாகம்- 1- -முனைவர் அரங்கராஜ் இனது திறனாய்வில் திருக்குமரனின் கவிதைகள்-

October 30, 2019 Admins 0

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின் எழுந்த படைப்புவெளி மக்களுடைய தேவைகளை புறந்தள்ளி படைப்பாளிகளின் புகழ் வாஞ்சைக்கு பலியாகிப் போகும் போக்குத் தென்படுகிறது. தகுதியற்ற படைப்பாளிகளை உருவாக்குவதும், தகுதியற்ற படைப்பாளிகளை ஊக்குவித்தலும் படைப்புவெளியினை ஆளும் அதிகாரம் தன் கையில் எடுப்பதற்கான செயற்பாடுகளாகும். மேலும்

No Image

உங்களை மன்னித்து அருளலாம் – திரு-

October 20, 2019 Admins 0

எங்கள் கனவு சுதந்திர வாழ்வு
உங்கள் ஆசை அகண்ட வேலி

வேலியை அகட்டும் வேலைக்கான
கூலியாய் எம்மை நினைத்தன் பொருட்டு
கனவின் கைகளில் ஆயுதம் கொடுத்தீர்
ஒன்றை ஒன்பதாய் பிரித்தீர்
இருந்தும்
கனவின் தினவை கண்களில் ஏந்தியோர்
சொந்தக் கால்களில் நடக்கத் … மேலும்

எம் வானின் தாரகைகள் – திரு

July 5, 2018 Admins 0

நானென்றும் நீயென்றும்
நடக்கின்ற உலகத்தில்
நாமென்று வழி காட்டினீர் நம்
நாடியில் உணர்வூட்டினீர்

கூனாகிக் கிடந்த எம்
குலத்தினை நிமிர்த்தினீர்
குன்றாக்கி விளக்கேற்றினீர் எம்
கொள்கையை நெய்யூற்றினீர்

இடியேதான் வீழ்ந்தாலும்
ஏனென்று கேட்காத
எம்மிலே செவி பூட்டினீர் எம்
இனத்துக்கு விழி … மேலும்

ஊன்றிவிட்டுச் செல்லுங்கள் – திரு

March 25, 2017 Admins 0

உந்த வேடுவரின் கற்களுக்கு
எப்பேனும்
இந்த மாதிரியாய் தேன் கூடு
வரலாற்றில்
வெந்து வீழ்ந்தடங்கிப் போனதுண்டோ
தேனீக்கள்
நொந்து வீழ்ந்தாலும்
நூறொன்றாய்ச் செத்தாலும்
சந்து பொந்துகளில்
மறைந்திருந்த வேடரது
சங்குகளிற் போட்டுக் கலைக்காமல்
விட்டதுண்டோ..!

எந்தக்காலத்தில்
இப்படியாய்த் தேனீக்கள்
கையுயர்த்திக் கால் … மேலும்

தூரத்தில் இருக்கின்ற தோழனுக்கு! – திரு

February 5, 2017 Admins 0

இப்போதும் உன் பெயரைச் சொல்லி விட முடிவதில்லை

எப்போதும் அது உள்ளே ரகசியமாய் இருக்கட்டும்

 

மீளுவதென்பதுவோ மிகக் கடினம் எனத்தெரிந்த

ஆழ ஊடுருவும் படையணியின் கூட்டமொன்றில்

இந்த முறையேனும் எனக்கிந்தச் சந்தர்ப்பம்

தந்தாக வேண்டுமென்று அடம்பிடித்தாய் ஆனாலும்

 

நாலு … மேலும்

திரும்பலுக்கான சத்தியம் – திரு

January 27, 2017 Admins 0

எம்முடைய பறப்பின்
கதை என்பது
சத்தியத்தின் கதை
அல்லது
திரும்பலுக்கான சத்தியம்

எமக்கெதிரே மோசமான
பருவங்கள் உருவாகின்ற போது
சுதந்திரமாய் வாழ்தல் என்ற
ஒற்றைக் காரணத்துக்காக
பல்லாயிரக் கணக்கான
மைல்களையும்
பல லெட்சம் இடர்களையும்
ஊடறுத்துப் பறக்கிறோம்

எங்கள் வாழ்வின் மீதான… மேலும்